48:47:21
இருக்கு வேதம் காண்டம்-48, மண்டலம்-47, நாள் உரைக்கோவை வாசகம்-21:
“இம்மண்ணுலகில் கடவுளர்கள் நேரில் வந்து அடிக்கடி சந்திப்பவர்களாகவும்; இம்மண்ணுலகத்தவர்களில் அடிக்கடி கடவுளரைச் சந்திப்பவர்களாகவும் இருக்கின்ற தமிழினத்தில்தான் கடவுளர்கள் மானுடர்களாகப் பிறப்பார்கள்; மானுடர்கள் கடவுளர்களாக மாறுவார்கள். இந்தத் தமிழர்களையே மூலவர்களாகவும், நாயகர்களாகவும், வாரிசுகளாகவும் உடைய இந்துவேதத்தில்தான்; முத்தமிழ் மொழியின் இந்துவேத உரைக்கோவை வாக்கு, வாக்கியம், வாசகம் அனைத்தும் உலகச் சமத்துவச் சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமூகத்தை உருவாக்குவனவாக இருக்கின்றன. இதன்படிதான், ஒவ்வோர் இந்துவும் உலகம் தழுவிய சமூக வாழ்வை உருவாக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.”