18:00:36
இருக்கு வேதம் காண்டம் 18, நாள்மலர் 36
“பாவையர்கள் பூசைக்குரிய மலர்களாவார்கள். இவர்களைப் பயன்படுத்தித்தான் எல்லாப் பூசைகளும் செய்யப்பட்டாக வேண்டும். இவர்களுக்காகத்தான் ‘ஒன்பது இரவுகள்’ (நவராத்திரி) என்ற திருநாள் கொண்டாட்டம் வகுக்கப் பட்டது. மேலும் இவர்களை வைத்துத்தான் பத்தி, சத்தி, சித்தி, முத்தி என்ற நான்கு நிலைகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன. இதனை தீச்சட்டி எடுத்தல், நெருப்புக் குழியில் இறங்குதல், யாக குண்டத் தீ வழிபாடு, திருவிளக்கு வழிபாடு என்பவை விளக்குகின்றன. இதுவே நான்கு வேதங்களின் முடிவு.