02:11:32
இருக்கு வேதம் காண்டம்:2, மண்டலம்:11, நாள் உரைகோவை வாசகமலர்:32:
'மகளிர் பூசைக்கு என மலர்ந்த மலர்கள் ஆவார்கள். இவர்களுடைய மென்மையான உணர்வுகளால்தான் அருளுலகை அறிந்து கொள்ள முடியும். எனவே, இவர்கள் இயற்கை விதிகளின்படி நிகழுகின்ற தீட்டு, உறவினர் மரணம், குழந்தை பிறப்பு, விதவை முதலிய காரணங்களைச் சொல்லிக் கொண்டு பூசை செய்யக் கருவறைக்குள் செல்வதைத் தடுத்து நிறுத்த முற்படக் கூடாது. கோயில் திருவிழாவில் எழுந்தருளும் சிலைக்கு பெண்களால்தான் அலங்காரம் செய்யப்பட வேண்டும். இவர்கள்தான் எழுந்தருளி சிலை தூக்கிச் செல்லும்பொழுது எழுந்தருளிச் சிலையின் அருகில் நின்று திருநீறு குங்குமம் முதலியவைகளை வழங்க வேண்டும்.’