40:00:00
இருக்கு வேதம் காண்டம் 40 முதல் 48 வரை உள்ள 9 காண்டங்களிலும் உள்ள 48 மண்டலங்களிலும், ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள 48 நாள் உரைக்கோவை வாசக மலர்களிலும் உள்ள கருத்து:
நாள், கோள், மீன், இராசி, உலகம், உலகில் உள்ள வெற்றிடம், காற்று, நெருப்பு, நீர், நிலம், கல், மண், மணல்; புல், பூண்டு முதலிய பயிரினங்கள்; புழு பூச்சி முதல் மனிதன் வரை உள்ள பல்வேறு வகையான உயிரினங்கள்; இவற்றின் தோற்றம் அல்லது பிறப்பு, வளர்ச்சி, இறப்பு, மறுபிறப்பு, உயிரணுக்களால் உருவாகின்ற ஆவி, ஆன்மா, ஆருயிர், இம்மூன்றும் இணைந்த சீவன் (இலிங்க வடிவில் இருப்பது; இதில் இலிங்கத்தின் அடிப்பாகம் ஆவி, ஆவுடையார் பகுதி ஆன்மா, மேலே இருக்கும் பாணம் ஆருயிர்) இந்தச் சீவனின் வாழ்நாள், இந்தச் சீவன் அப்படியே அழியாமல் இருப்பது, இந்தச் சீவன் அழிவைப் பெறுவது, ... முதலிய செய்திகள் பரவலாக பல கோணங்களில் விளக்கப் பட்டிருக்கின்றன.