48:38:45
இருக்கு வேதம் காண்டம்-48, மண்டலம்-38, நாள் உரைக்கோவை வாசகம் 45
அசுரவேதம் காண்டம்-1, மண்டலம்-1, நாள் வாக்கு 1
அதர்வான வேதம் காண்டம்-1, மண்டலம்-1, நாள் வாக்கியம் 1
யாம வேதம் காண்டம்-1, மண்டலம்-1, நாள் வாசகம்-1
“அண்டபேரண்டமாளும், மூலப் பதினெண்சித்தர்கள், மண்ணுலகங்களின் தோற்றங்களின் போதும் சிதைவுகளின் போதும் கடல்நீர் கடையப்பட்டு மரணமிலாப் பெருவாழ்வுக்குரிய அமுதம் வெளிப்படுவது பற்றியும், அண்டபேரண்டங்களில் உள்ள தேவர் உலகங்களிலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்குரிய அமுதத்தைக் கொண்டு வருவது பற்றியும், சித்தர் மருத்துவ முறையில் மரணமிலாப் பெருவாழ்வைத் தரக்கூடிய அமுதம் தயாரிக்கப் படுவது பற்றியும், சிறந்த திருவருட் செல்வர்களுக்கு மட்டும் அவரவர் காலத்தில் வாழுகின்ற சிவன்களும், சிவபெருமான்களும், பரமசிவன்களும், மகாசீவன்களும், சர்வசீவன்களும் தேவர் உலகத்திலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்குரிய அமுதத்தை இம்மண்ணுலகில் கொடுத்தோ அல்லது அருளாளர்களை தேவருலகத்திற்கோ அல்லது இந்த உலகம் கடந்த கங்குல் பகலற்ற இடத்துக்கோ அழைத்துச் சென்று மரணமிலாப் பெருவாழ்வுக்குரிய பத்தி செய்யும் நான்கு முறைகளும், நான்கு வழிவகைகளும், நான்கு நெறிகளும் செயல்வடிவில் வழங்கப் பட்டிருப்பதுதான் இந்துவேதத்துக்கும், இந்துமதத்துக்குமுரிய பெருமையாகும். இப்பேருண்மைகளை விளக்கித்தான் அனாதிக் காலத்தில் உருவாகிட்ட எண்ணூறுக்கும் மேற்பட்ட வேதங்களையும், வேதமதங்களையும் வென்று அகற்றி இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் இம்மண்ணுலகம் முழுவதும் நிலைபெறச் செய்திட்டார் ஆதிசிவனார். இதற்காக ஆதிசிவனார் 7000 கல் பரப்பளவு பெற்றிருந்த இளமுறியாக்கண்டம் எனும் குமரிக் கண்டத்தில் இருந்த தென்னிமய மலை அடிவாரத்தில் முத்தமிழையும், முத்தமிழ் மூலம் இந்து வேதத்தையும், இந்துமதத்தையும் கற்பிப்பதற்குரிய திருவிடத்தை, திராவிடத்தை உண்டாக்கினார். அத் திருவிடத்தில் தயாரான தமிழர்கள் திருவருட்செல்வர்களாக, அருளாளர்களாக, ஆன்மீகவாதிகளாக, ஆத்திகர்களாக, திருவிடத்தவர்களாகத் தயாரானார்கள். இத் திருவிடத்தார்கள், திராவிடர்களைப் பயன்படுத்தி இந்துவேதமும், இந்துமதமும் யாண்டும் பரவியுள்ள முதல் இந்தியாவை உருவாக்கினார். இந்த முதல் இந்தியாவில் தயாரான இந்துக்களை வைத்துக் கொண்டு தெற்கே இருந்த இமயமலைக்கும், வடக்கே இருந்த விந்திய மலைக்கும் இடையில் ஒன்பது கோள்களுக்காக, இந்தியாக்கள் ஒன்பது என்றும், பன்னிரண்டு இராசிகளூக்காக இந்தியாக்கள் பன்னிரண்டு என்றும், இருபத்தேழு விண்மீன்களுக்காக இந்தியாக்கள் இருபத்தேழு என்றும் ஆகமொத்தம் நாற்பத்தெட்டு இந்தியாக்களை உருவாக்கினார். இந்த இந்தியாக்களை உருவாக்கிட தமிழர்கள் திருவிடத்தார்கள், திராவிடத்தார்கள், திராவிடர்கள், திருவருட்செல்வர்களாக, ஆத்திகர்களாக, ஆன்மீகவாதிகளாக இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் இவை கூறப்பட்டுள்ள முத்தமிழ்மொழியையும் முறையாகக் கற்பிக்கும் நிறுவன நிர்வாகக் கட்டமைப்புக்களை உடைய திருவிடங்களை நிர்வகிக்கும்; நிர்வகித்துக் காப்பாற்றும் திருவருட்செல்வர்களாக, திருவிடத்தார்களாக, திராவிடத்தார்களாக, திராவிடர்களாக விளங்கினார்கள். எனவேதான், தமிழர்களே இந்துவேதத்துக்கும், இந்துமதத்துக்கும் மூலவர்கள், காவலர்கள், நாயகர்கள், தலைவர்கள், வாரிசுகள், வித்துக்கள், நாற்றங்கால்கள், விதைப்பண்ணைகள், நாற்றுப் பண்ணைகள், முழுமுதற் தலைமை ஆச்சாரியார்கள், முழுமுதற் தலைமை ஆச்சாரியக் குருபீடங்கள், முழுமுதற் தலைமை ஆச்சாரியக் குருபீடக் குருதேவர்கள் என்ற உரிமையையும், பெருமையையும் இருக்கு வேதத்தின் இறுதியிலும், இருக்கு வேதத்திலிருந்து பிரிக்கப்பட்ட அசுர வேதம், அதர்வான வேதம், யாமவேதம் எனும் மூன்று வேதங்களின் ஆரம்பத்திலும் தெளிவாகத் திட்டவட்டமாக வெளியிட்டுள்ளனர், அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள்.