47:18:27
காண்டம் 47, மண்டலம் - 18, நாள் உரைக்கோவை வாசகமலர் 27
பெண்களை மறந்தோ அல்லது துறந்தோ அல்லது மறுத்தோ அல்லது வெறுத்தோ அல்லது எதிர்த்தோ அல்லது இழித்துப் பழித்துப் பேசியோ அல்லது தீட்டு என்று விலக்கியோ, ஒதுக்கியோ தள்ளுவது சிவபெருமான்களாலும், அவர்களது துணைவியர்களாலும், மாயோன்களாலும், அவர்களின் துணைவியர்களாலும், பிறமண்களாலும், அவர்களது துணைவியர்களாலும், வருணதேவன்களாலும் அவர்களின் துணைவியர்களாலும், இந்திரன்களாலும், அவர்களின் துணைவியர்களாலும், இறமண்களாலும், அவர்களின் துணைவியர்களாலும், முருகனாலும், முருகனின் துணைவியர்களாலும், பிள்ளையாராலும், பிள்ளையாரின் துணைவியர்களாலும், கணபதியாலும், கணபதியின் துணைவியர்களாலும், வினாயகராலும், வினாயகரின் துணைவியர்களாலும், ஐயனார்களாலும், ஐயனாரின் துணைவியர்களாலும் இப்படி இந்துமதத்தை சேர்ந்த எல்லா ஆண் கடவுள்களும், பெண் கடவுள்களும் பெண்களை அவமானப் படுத்துவதையும், இழிவு படுத்துவதையும் பூசையிலிருந்து ஒதுக்குவதையும், தீட்டு, துலக்கு, விலக்கு உரியவர்கள் என்று ஒதுக்குவதையும் பெரிய பாவம் என்றும், சாபம் என்றும் கண்டிக்கிறார்கள்.
பெண்களே அருளுலகின் விழியாக, வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாக இருக்கிறார்கள் என்பதுதான் இந்துவேதத்தின் சாரம். இந்துமதத்தின் செயல்திட்டம்