05:07:17
இருக்கு வேதம் காண்டம்-5, மண்டலம்-7, நாள் உரைக்கோவை வாசகம்-17,18,19
இருக்கு வேதம் காண்டம்-7, மண்டலம்-3, நாள் உரைக்கோவை வாசகம்-1,3,9,18,27,33,48.
‘இந்துவேதம் எனப்படும் ஆலமரத்தின் விழுதுகளாகவோ, கிளைகளாகவோ, இலைகளாகவோதான் பல வேதங்கள் தோன்ற முடியும்’
இதேபோல் மேலே குறிப்பிட்ட காண்டம், மண்டலம், நாள் உரைக்கோவை வாக்கிய, வாக்கு, வாசகம் முதலிய எண்ணிக்கைக்குரிய வாசகங்களில்தான் அசுரவேதம், அதர்வான வேதம், யாம வேதம் என மூன்று வேதங்களிலும் இந்து வேதத்திலிருந்துதான் மற்ற வேதங்கள் தோன்ற முடியும் என்ற கருத்து பல்வேறு சொற்றொடர்களின் அமைப்புக்களில் பல்வேறு உதாரணங்களோடு விளக்கப் பட்டிருக்கின்றன.
அதாவது, முதலில் தோன்றியது இருக்கு வேதம், இது ஆதிசிவனாரால் கூறப்பட்டது. இந்த வேதத்தை எளிமைப்படுத்தி அவரது மகனான முருகன் அசுரவேதம், அதர்வான வேதம், யாமவேதம் என்ற மூன்று வேதங்களை உண்டாக்கினார். இவையெல்லாவற்றிலும் இருக்கு வேதத்தில் இருப்பது போன்றே ஒவ்வொரு வேதத்திலும் காண்டங்கள் 48, ஒவ்வொரு காண்டத்திலும் மண்டலங்கள் 48, ஒவ்வொரு மண்டலத்திலும் நாள் உரைக் கோவை வாசகத்திற்கு 48 என்ற பகுப்பு கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது. மேலும், இருக்கு வேதத்தில் கூறப்படுகின்ற மிகச் சிறந்த கருத்துக்களை யெல்லாம் உடைய காண்டம், மண்டலம், நாள் வாசக மலர் ஒரே மாதிரியாக அதாவது இருக்கு வேதத்தில் எந்தக் காண்டத்தில், எத்தனையாவது மண்டலத்தில், எத்தனையாவது நாள் வாசக மலராகக் குறிக்கப் பட்டிருக்கின்றனவோ அதே முறைப்படி இருக்கு வேதத்தின் கருத்துக்களை அந்தந்த வேதத்திற்கு ஏற்றபடி மேலும் பல புதிய விளக்கங்களோடு விளக்கியுரைக்கிறார் முருகப்பெருமான்.
‘இருக்குவேதத்தில்’ இருப்பவை அனைத்தையும் படித்து வாழ்நாளை வீணாக்காமல் ‘யாமவேதம்’ ஒன்றை மட்டும் படித்தால் போதும்.
மண்ணுலகத்தை கடந்து சத்திகளைப் பெற விரும்புகிறவர்கள் வேண்டுமானால் ‘அதர்வான வேதத்தை’ பயன்படுத்தலாம்.
‘அசுரவேதம்’ மட்டும் பதினெண்சித்தர் பீடாதிபதிகளாக இருக்கக் கூடியவர்களின் விந்துவழி வாரிசுகளுக்கும், குருவழி வாரிசுகளுக்கும், கருவழி வாரிசுகளுக்கும் உரியவை. ஆனால், பதினெண்சித்தர் பீடாதிபதியுடைய ஆணைக்குக் கட்டுப்பட்டவராக உண்மையான தொண்டராக இருக்க கூடியவர்கள்தான் அசுரவேதத்தின் சத்தி சித்தி முத்திகளைப் பெறமுடியும். இல்லையென்றால், அசுரவேதமே அவர்களுக்கு எமனாக மாறும். இந்துவேதத்தின் பெயர்களைக் கூறிக்கொண்டு யாரையும் ஏமாற்ற இயலாது. ஏனென்றால், காலங்கள் தோறும் சிவப்பதவிகளில் அமர்ந்திருக்கின்ற சிவபெருமானை வணங்கி பத்தி செய்கின்றவர்கள் இருக்கு வேதத்தை மானசீகமாக உணர முடியும். அப்படிப்பட்டவர்கள் இருக்கு வேதத்திற்கு பாதுகாப்பாக இருப்பார்கள். எனவே, இந்துவேதத்தையோ, இந்துமதத்தையோ எவராலும் சிதைக்கவோ, சீரழிக்கவோ இயலாது! இயலாது!! இயலாது!!!