32:36:46
இருக்கு வேதம் காண்டம்-32, மண்டலம்-36, நாள் உரைக்கோவை வாசகம்-46
“அருளுலகிலுள்ள 8,84,736 வகைப்பட்ட கடவுள்களிடத்தும், பத்தி செலுத்தி சத்தி, சித்தி, முத்திகளைப் பெற்றிடும் சாதனையாளர்கள் சாதுக்களாவார்கள். இந்த சாதுக்களின் வழித்தோன்றல்கள் தங்களுடைய ஆதியாக இருக்கின்ற சாதுக்களின் பெயரைக் குறித்து ‘தாங்கள் குறிப்பிட்ட சாதுக்களை ஆதியாக உடையவர்கள்’ எனும் பொருளை உடைய சொல்லான ‘சாதி’ எனும் பிரிவை இந்துவேதத்தில், இந்துமதத்தில் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பதால்; ‘முன்னோர் வழிபாடும் மூத்தோரை மதித்தலுமே இந்துவேத சாரம்’ என்ற தத்துவம் செயலாகிறது. இது, சமுதாயம் எனும் ஆலமரத்தின் எண்ணற்ற வேர்களாக இருந்து சமுதாயக் கட்டுக்கோப்பைப் பாதுகாத்திடப் பயன்பட்டிடல் வேண்டும்”.