02:11:43
இருக்குவேதம் காண்டம்-2, மண்டலம்-11, நாள் உரைக்கோவை வாசகம்-43:
“இப் பூவுலகில் இம் மாஞாலத்தில், இப் புவிப்பரப்பில், இப் பூமியில், இவ் வையகத்தில் யுக முடிவுகளில் நிலப்பரப்புகள் நீர்ப்பரப்பினுள் மூழ்கியும், நீர்ப்பரப்பிலிருந்து புதிய நிலப்பரப்புக்கள் நெடிதுயர்ந்து வான்முட்டும் மலைகளோடு எழுந்தும், தோற்றமாற்றங்கள் இயற்கையாக விளைந்திடும். ஆனாலும், அண்டபேரண்டம் முழுவதும் என்றென்றும் இருந்துவருகின்ற, இருந்து வரக்கூடிய, இருந்து வரப்போகின்ற இருக்கு வேதமான இந்துவேதம் மட்டுமே அனைத்து வகைப்பட்ட பயிரினங்களுக்கும், உயிரினங்களுக்கும் நல்வாழ்வு தரும் விழியாக, வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாகா விளங்கிடும். எனவே, யுகமுடிவுகளால் விளையும் அழிவுகளையும் கடந்து உலகம் முழுவதும் உள்ள பயிரினங்களையும், உயிரினங்களையும் காக்கின்ற இருக்கு வேதமான இந்துவேதத்தை இந்த உலகின் மூலவேதமாக, முதல் வேதமாக, முழுமையான வேதமாக, பொதுவேதமாக உலகோர் உணர்ந்திட முயற்சிக்கும் வாழ்க்கையாகவே ஒவ்வோர் இந்துவின் வாழ்க்கையும் அமைய வேண்டும். இதற்குரியவர்களாக, இந்துக்களைத் தயாரிக்கவே இருக்கு வேதத்திலும், அதன் உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட அசுர வேதத்திலும், அதர்வான வேதத்திலும், யாம வேதத்திலும் ‘ஓர் இந்துவின் வாழ்க்கை’ என்ற தலைப்பிட்டே வேத உரைக்கோவைகளும், உரைக்கோவை வாசகங்களிலும், வாக்குகளும், வாக்கியங்களும், வாசகங்களும் இவற்றின் கருவாக அதாவது சூலாக உருவாக்கப் பட்டுள்ள 4,42,368 சூலகங்கள் எனப்படும் சுலோகங்களிலும் உரிய விளக்கங்கள் பெரிய அளவில் தரப் படுகின்றன.”