08:15:32
இருக்குவேதம் காண்டம்-8, மண்டலம்-16, நாள் வாசகம்-32
“இம் மண்ணுலகம் நெருப்புக் கோளமாகவும், பனிக் கோளமாகவும், நீர்க் கோளமாகவும் இருந்து கல்லும் மண்னும் தோன்றிட ஆரம்பித்த காலத்தில் இருந்தே பொருள் அணுக்களும், அருள் அணுக்களும், உயிர் அணுக்களும், மெய் அணுக்களும், படிப்படியாகத் தோன்றி உயிர்மெய் அணுக்கள் வடிவப்பட்டுப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப் போக்கில் தோன்றின. அக்காலக் கட்டங்களிலேயே அருவங்கள், அருவ உருவங்கள், உருவ அருவங்கள், உருவங்கள் என்று நான்கு வகையான வடிவமைப்புக்களை உடைய அருளுலகத்தவர்கள், இம்மண்ணுலகில் நீர்ப் பரப்புக்கிடையில் இருந்திட்ட எல்லா வகையான நிலப்பரப்புக்களிலும் பயிரினங்களையும், உயிரினங்களையும் போல் வகைவகையாகத் தோன்றினார்கள். இவர்களை யெல்லாம் உண்–ழிகளில் தங்கச் செய்து, இவர்களின் வகைகளைப் பட்டியலிட்டு, இந்த அருளுலகத்தவர்கள் கடவுள்கள் என்ற பொதுப் பெயரில் மொத்தம் எட்டு இலட்சத்து எண்பத்து நாலாயிரத்து எழுநூற்றி முப்பத்தாறு (8,84,736) வகைப்படுவர் என்ற கணக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் எந்தெந்த நாட்டு எல்லைக்குள், எந்தெந்த இனத்தவர்களுக்கிடையில், எந்தெந்த மொழியினர் வாழும் பகுதியில் இயற்கையாகப் பிறப்பெடுத்தார்களோ! பிறப்பெடுக்கிறார்களோ! பிறப்பெடுத்தார்களோ! அந்தந்த நாட்டவருக்கும் இனத்தவருக்கும் மொழியினருக்கும் மட்டுமே உரியவர்களாகிவிடுவார்கள். எனவே ஒவ்வொரு நாட்டவருக்கும் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு மொழியினருக்கும் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில், நூறாயிரக் கணக்கில், ஆயிரக் கணக்கில், நூறாயிரக் கணக்கில் தனிப்பட்ட கடவுள்கள் தான் உண்டு. இக்கடவுள்கள் தங்களுடைய நாட்டவருக்கும், இனத்தவருக்கும், மொழியினவருக்கும் மட்டும் தான் உதவுவார்கள்.