05:17:15
இருக்கு வேதம் காண்டம்: 5, மண்டலம்: 17, நாள் உரைக்கோவை வாசக மலர்: 15
இம்மண்ணுலகில் உள்ள கடவுளர்கள் அனைவருமே அந்தந்த வட்டாரத்தை அல்லது நாட்டை அடிப்படையாகக் கொண்டும், அந்த நாட்டில் வாழும் மானுட இனத்தாரையும், அவர் பேசும் மொழியையும் அடிப்படையாகக் கொண்டே தங்களுக்குரிய பூசை நெறிமுறைகளையும், விதிகளையும், பலிபொருட்களையும், படையல் பொருட்களையும், மற்ற சடங்கியல்களையும், சடங்கியல்களுக்குரிய பொருட்களையும் ஏற்றுக் கொள்கின்றனர்.