முடிவுரை
இப்படி இந்து மதத்திற்கு ஏற்பட்டுள்ள, ஏற்பட்டுவிட்ட அவலக் கேவலங்களைப் பற்றி எண்ணிப் பார்த்திட இந்து மதத்தவர்களுக்கு அருளார்ந்த அழைப்பு அறிவிப்பையும், அறிவார்ந்த அழைப்பு அறிவிப்பையும் வழங்குவதுடன், மேலும் காலப்போக்கில் எப்படியோ குறைத்தும் மறைத்தும் மறந்து போகும்படிச் செய்திடப்பட்ட, மிகத்தளிவான, எளிமையான, வெளிப்படையான நேரடியான வரலாற்று உண்மைகள்; இக்கலியுகத்தில் குழப்பங்களும், முரண்பாடுகளும், குறைகளும் மிகுந்த தெளிவற்ற நிலையில் வாழுகின்ற அவலக் கேவல நிலைகளையும், சிரழிவுகளையும் செப்பனிடும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ளதுதான், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, இந்து வேத பீடம், இந்து மதத் தலைமை ஆச்சாரிய மடம், இந்து மத முழுமுதற் தலைமைக் குருபீடம், இந்துமத மூலப்பண்டாரம், இந்துமத மூலக் குருமகா சன்னிதானம், இந்துமத மூல ஆதீனம், இந்துமத மூலத் தம்பிரான், இந்துமத மூலப்பண்டார சந்நதி, இந்துமத மூலப்பண்டார சந்நிதி என்ற உரிமைகளுக்கும், பெருமைகளுக்கும் உரிய இந்து மதத்தைத் தோற்றுவித்த பதினெண் சித்தர் மடம், பீடம் கருகுலம்.
இது காரணோடை, சென்னை - 600 067இல் அமைந்துள்ளது.
இம் மாபெரும் பணிகளுக்கும், இந்து வேதத்தை ஆர்வமுடையவர்களுக்குப் பயிற்றுவிக்க இந்து வேத பாடசாலை அமைக்கும் பணிக்கும் ஏதுக்களையும், ஏந்துகளையும், பொருளுதவிகளையும் அளிக்க முன் வாரீர்! வாரீர்! வாரீர்!