02:11:42
இருக்கு வேதம் காண்டம்-2, மண்டலம்-11, நாள் உரைக்கோவை வாசகம்-42:
“நெருப்புக் கோளமாக இருந்து பனிக்கட்டிக் கோளமாகி, நீர்க்கோளமாகிப் பிறகு தோன்றிய முதல் பெருநிலப் பரப்பான இளமுறியாக் கண்டத்தில் இயற்கையாக வெளிப்பட்டிட்ட அணுக்கள், உயிரணுக்கள், அருளணுக்கள் என்ற மூன்றும்; அவ்வப்போது விளைந்த இயற்கையின் தட்பவெப்ப பக்குவநிலைகளுக்கும், இப்பூவுலகை ஆட்சி செலுத்தும் கோள்கள் ஒன்பது (9), விண்மீன்கள் இருபத்தேழு (27), இராசிகள் பன்னிரண்டு (12) எனும் நாற்பத்தெட்டின் இயக்க விதிகளுக்கேற்ப அருவங்கள், அருவுருவங்கள், உருவருவங்கள், உருவங்கள் தோன்றின. இவற்றிற்கு தேவையான ஆன்மாக்கள், ஆருயிர்கள், ஆவிகள் என்ற மூன்று வகைகளும் தோன்றின. இம்மூன்றும் அவ்வப்போது இணைந்து இணைந்து மணீசர்களை உருவாக்கும் சீவன்களை உருவாக்கின. இந்த உருவாக்க நிலைகளில், நியதிகளில், விதிகளில், இயற்கை உருவாக்கிய பக்குவச் சூழல்களில் வான் அணுவின் ஆட்சி, வளி அணுவின் ஆட்சி, தீ (நெருப்பு) அணுவின் ஆட்சி, நீர் அணுவின் ஆட்சி, நிலத்து அணுவின் ஆட்சி எனும் ஐவகைப்பட்ட அணுக்களின் ஆட்சிநிலை நியதிகளுக்கும், நீதிகளுக்கும், விதிகளுக்கும், ... இயற்கையாகவே ஏற்பட்டிட்ட முட்டுதல்களால் நிகழ்ந்திட்ட கூட்டுதல்களால் விட்டுவிட்டு கருவாக்கப்பட்ட, கருவாக்கி உருவாக்கப்பட்ட படைப்புகளில் காற்று, கருப்பு, பேய், பிசாசு என்ற நான்கும் கட்டுக்குட்படாதவைகளாயின. ஆனால், ஆனால், ஆனால், மானுடர்களிலிருந்து உண்டான ஆண்டவர்கள் (மாண்டவர்கள்), குலதெய்வங்கள், கிராமத்துத் தேவர் தேவதைகள், நாட்டுக் கடவுளர்கள் என்ற நான்கு வகையினரும் கட்டுக்குட்பட்டவர்களாயினர். இந்த எண்வகையினரின் சாதனைகளைச் சாதிக்கும் சாதியினர்களாக ‘எண்வகைச் சாதியினர்’ தோன்றினர். ஏற்கனவே, நூற்றுஎண்பத்தி நான்கு (184) வகைப்பட்ட சாதியினர்கள் பட்டியலிடப்பட்டதோடு எண்வகையினரையும் சேர்த்து மொத்தம் நூற்றுத் தொண்ணூற்றிரண்டு (192) வகைப்பட்ட சாதிகளாயினர் இம்மண்ணுலகினர். எனவேதான், ‘இம்மண்ணுலக அருளாட்சிப் பீடத்தில் அமரக்கூடிய பதினெண்சித்தர் பீடாதிபதிகள், இந்துவேத நாயகமாக, இந்துமதத் தந்தையாக, அனாதி ஆதிகடந்த தம்பிரான் அடிகளாராக, கருமூலப் பண்டாரமாக, கருகுல ஆதீனமாக, பரபிறம்மமாக, எல்லாம்வல்ல சித்தராக, அருளாட்சி நாயகமாக, ... செயல்பட்டிடும் வாழ்வில் இந்த 192 வகைப்பட்ட சாதியினருக்குமுரிய சாதனைகளைச் சாதித்தவர்கள் என்ற அருட்பட்டங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இந்துவேத இந்துமத நிறுவன நிர்வாகக் கட்டமைப்புக் கட்டுக்கோப்பு சட்டதிட்டம் இருக்குவேதமான இந்துவேதத்தில் அருளப்படுகிறது”.