01:08:28
இருக்கு வேதம் காண்டம்: 1, மண்டலம்:8, நாள் உரைக்கோவை வாசக மலர்: 28
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கைக்குரிய எல்லா வகையான உரிமைகளையும், பெருமைகளையும் தன்னுடைய தந்தை வழியாகவே ஏற்றுக் கொள்கிறான் என்பதனால் இந்தக் குடும்ப ஆண்டவர்கள்;
(1) இன்றைய தந்தை, தந்தையால் உருவாக்கப் பட்டிட்ட தாய், உடன் பிறந்தவர்கள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு ஆண்டவராக ஆகியிருந்தால், அவர்கள் 'முதல் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(2) இந்த அப்பாவின் அப்பா, அதாவது, தாத்தா தாத்தாவால் உருவாக்கப் பட்டிட்ட தாத்தாவின் மனைவிகள், தாத்தாவின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால் அவர்கள் 'இரண்டாம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(3) இந்த தாத்தாவின் அப்பா (அதாவது பாட்டன்), பாட்டனால் உருவாக்கப் பட்டிட்ட பாட்டனின் மனைவி, பாட்டனின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால், அவர்கள் 'மூன்றாம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(4) இந்த பாட்டனின் அப்பா (அதாவது பூட்டன்), பூட்டனால் உருவாக்கப் பட்டிட்ட பூட்டனின் மனைவி, பூட்டனின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால் அவர்கள் 'நான்காம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(5) இந்த பூட்டனின் அப்பா (அதாவது ஓட்டன்), ஓட்டனால் உருவாக்கப் பட்டிட்ட ஓட்டனின் மனைவி, ஓட்டனின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால் அவர்கள் 'ஐந்தாம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(6) இந்த ஓட்டனின் அப்பா (அதாவது சேட்டன்), சேட்டனால் உருவாக்கப் பட்டிட்ட சேட்டனின் மனைவி, சேட்டனின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால் அவர்கள் 'ஆறாம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
(7) இந்த சேட்டனின் அப்பா (அதாவது சீயோன்), சீயோனால் உருவாக்கப் பட்டிட்ட சீயோனின் மனைவி, சீயோனின் பிள்ளைகள் எனும் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் யாராவது மாண்டு, ஆண்டவராக ஆகியிருந்தால் அவர்கள் 'ஏழாம் தலைமுறை ஆண்டவர்கள்' எனப்படுவார்கள்.
இப்படி குடும்ப ஆண்டவர்கள் என்பவர்கள் ஏழு தலைமுறைகளில் தோன்றுகின்ற அனைவரும் ஆவார்கள்.