Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 01:02:03

01:02:03

இருக்கு வேதம் காண்டம்-1, மண்டலம்-2, நாள் உரைக்கோவை வாசகம் 3; மற்ற மூன்று வேதங்களிலும் இதே செய்திகள் சுருக்கி விளக்கி இதே எண்ணிக்கை உடைய காண்டம், மண்டலம், நாள் வாக்கு, வாக்கியம், வாசகமாக அருளப் பெற்றன:

அனாதி காலமெனும் 4,85,920 ஆண்டுகள் இடைவெளியில் அண்ட பேரண்டங்களிலிருந்து வந்த அனைத்து வகைப்பட்ட அருளுலகத்தவர்களும், பொருளுலகத்தவர்களும்; இப்புவிப் பரப்பு முழுதும் தோன்றிட்ட எண்ணூறு வகைகளுக்கும் மேற்பட்ட இனத்தாரோடு எல்லா நிலைகளிலும் இரண்டறக் கலந்து பழகி; இம்மண்ணுலகில் இயற்கை ஈன்றெடுத்திட்ட மணீசர்களால் உருவாக்கப் பட்டிட்ட வேதங்களாலும், வேத மதங்களாலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வெறிநிறை பிரிவினைச் செயல்களும், போட்டா போட்டி சண்டை சச்சரவுப் போர்களும் தொடர்ந்து தொல்லைகளையும், துன்பங்களையும், அழிவுகளையும், இழிவுகளையும், அமைதியின்மைகளையும், ஒற்றுமையின்மைகளையும், நிம்மதியின்மைகளையும், நிறைவின்மைகளையும் விளைவித்து வருவதைத் தடுக்க முடியவில்லை, தடுக்க முடியவில்லை, தடுக்க முடியவில்லை, தடுக்கவே முடியவில்லை. அம்மட்டின்றி ஏறத்தாழ எல்லா வேதங்களும், வேதமதங்களும் தங்கள் தங்களின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும், ஆக்கிரமிப்பிற்கும், ஆட்சிக்கும், வறட்டுப் பிடிவாதத்தோடும், முரட்டு வெறியோடும் முயற்சிப்பனவாகவே இருந்திட்ட காரணத்தினால்; வேதத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் கூட்டம் கூட்டமாக மக்கள் சண்டைச் சச்சரவுகளையும், போர்களையும், கொலை கொள்ளை போன்ற கொடுமைகளையும், ஏமாற்றுக்களையும் நிகழ்த்திடும் கலையை கலையின் ஆச்சாரத்தை வேத நீதியாகவும், வேதமத நியதியாகவும் ஆக்கின. அதனால், தனிமனித வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் கண்மூடித்தனமான வறட்டுப் பிடிவாதமும், பிறரை அடக்கி ஆளூம் ஆதிக்கவெறியும்; தான் தங்களுடையது என்ற அகம்பாவமும், ஆணவமும், தனக்கென்ற தங்களுக்கென்ற பேராசை வெறியும், பதவி வெறியும், புகழ் வெறியும் நியாயமான மனித உணர்வுகளாக ஆக்கப் பட்டுவிட்டன. எல்லா வேதங்களாலும், வேதமதங்களாலும், அந்தக் காலகட்டத்தில்தான் அண்ட பேரண்டங்களிலிருந்து வந்திட்ட அனைவருமே; இம்மாஞாலத்தில் மணீசர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், பண்படுத்திட வேண்டுமென்றால் அண்டபேரண்டங்களை ஆளுகின்ற இந்துவேத நூல்களும், இந்துமத நூல்களூம் அவை அருளப்பட்டுள்ள அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியான முத்தமிழ்மொழியும், இம்மண்ணுலகத்தார்க்கு முறைப்படி வழங்கப்பட்டேயாக வேண்டும் என்ற பரிந்துரையை அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்களிடம் வழங்கினார்கள். அப்பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தொடர்ந்து ஆய்வுகள் நிகழ்த்தி இம்மண்ணுலகில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து அண்டபேரண்டமாளும் முத்தமிழுக்கும், இந்து வேதத்துக்கும், இந்து மதத்துக்கும் நாற்றங்காலாக, விதைப் பண்ணையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மணீசர்களைத் தயாரிப்பதற்குரிய திருவிடத்தை உருவாக்கி அங்கு முத்தமிழைக் கற்பித்து தமிழர்களை உருவாக்கி; அத்தமிழர்களையே மெய்யான ஆத்திகர்களாக, ஆன்மீகவாதிகளாக, பத்தியுணர்வு உள்ளவர்களாக, அருளுலக நாட்டமுடையவர்களாக திருவிடத்துத் திராவிடர்களாகத் தயாரித்தே! தயாரித்த பிறகே! அத்திராவிடர்களிடம் இந்துவேத நூல்களையும், இந்துமத நூல்களையும் ஒப்படைத்து அவர்களையே திருவருட்செல்வர்களாக, திருவருள் வித்துக்களாக, திருவருள் விதைப்பண்ணைகளாக, திருவருள் நாற்றுப் பண்ணைகளாக, திருவருள் கல்வி கற்பிக்கும் திருவிடத்தின் வாரிசுகளாக, திருவிடத்தார்களாக; திருவருட் செல்வங்களுக்காக வாழும் திராவிடர்களாக, இந்த உலகம் முழுவதும் அனுப்பி இந்துவேதத்தாலும், இந்துமதத்தாலும் தனிமனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமுதாய வாழ்விலும், அரசியல் வாழ்விலும் மனித உணர்வு, மனிதப் பற்று, மனிதப் பாசம், மனித அன்பு, மனிதக் காதல், மனித நட்பு, மனிதத் தோழமை, மனித வாழ்வியலின் புனிதம், மனித வாழ்வியலின் இனிமை, மனித வாழ்வியலின் கனிவு, மனித வாழ்வியலின் ஒற்றுமை, மனித வாழ்வியலின் உறவு, மனித வாழ்வியலின் உரிமை, மனித வாழ்வியலின் சமாதானம், மனித வாழ்வியலின் சகோதரத் தத்துவம், மனித வாழ்வியலின் பொதுவுடமைச் செயல் சித்தாந்தம், மனித வாழ்வியலின் நிம்மதி, மனித வாழ்வியலின் நிறைவு, மனித வாழ்வியலின் அமைதி, மனித வாழ்வியலின் அடக்கம், மனித வாழ்வியலின் கூட்டுறவுப் பண்பு, மனித வாழ்வியலின் கூடி வாழும் நாகரீகம், மனித வாழ்வியலின் இரக்கம், மனித வாழ்வியலின் ஈகை, மனித வாழ்வியலின் கட்டுப்பாடு, மனித வாழ்வியலின் கடமை உணர்வு, மனித வாழ்வியலின் முறையான இன்பத் துய்ப்பு, மனித வாழ்வியலின் பொறுப்புணர்வு, மனித வாழ்வியலின் பொறுமையுணர்வு, மனித வாழ்வியலுக்குரிய தனிமனித வாழ்க்கை ஒழுகலாறுகள், குடும்பக் கூட்டமைப்பு ஒழுகலாறுகள், சமுதாயக் கூட்டமைப்பு விதிகள், நியதிகள், நீதிகள், அரசியல் நிறுவன நிர்வாக வடிவமைப்புக்கள், சட்டதிட்டக் கட்டுப்பாடுகள், விதிகள், நியதிகள், நீதிகள்... முதலிய அனைத்தும் இறை உணர்வின் அடிப்படையிலும், அருளுலகக் கொள்கை, குறிக்கோள், கோட்பாட்டு நடைமுறைகளின் துணையிலும் வளர்த்திடுவதற்காக; வளர்த்து நற்பயன்களை விளைவித்திடுவதற்காக திட்டங்கள் உருவாக்கப் பட்டன. இதுவே, மூலப் பதினெண்சித்தர்கள் இம்மண்ணுலகுக்காக உருவாக்கிய அருட்பணி விரிவாக்கத் திட்டம்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே