48:46:47
இருக்கு வேதம் காண்டம்-48, மண்டலம்-46, நாள் உரைக்கோவை வாசகம் 47
“அண்டபேரண்ட அருளாட்சி நிகழ்த்தும் அருட்கொடை வள்ளல்களான மூலப் பதினெண்சித்தர்கள் இந்துவேதத்திலும் இந்துமதத்திலும் உலகம் முழுதும் உள்ள எல்லா மொழியினருக்கும், எல்லா இனத்தவருக்கும், எல்லா நாட்டவருக்கும் அருளுலகச் சத்திகள் மூலம் பாதிப்புகளை அகற்றி பாதுகாப்புக்களைத் தரக்கூடிய அருளூறு கலைகளாக
1. கடவுட்கலைகள் - ஒன்பது
2. தெய்வீகக் கலைகள் - ஒன்பது
3. பேய்க்கலைகள் - ஒன்பது
4. நோய்க்கலைகள் - ஒன்பது
5. தேய்கலைகள் - ஒன்பது
6. அருட்கலைகள் - நாற்பத்தெட்டு
7. ஆயகலைகள் - நாற்பத்தெட்டு
8. ஓய்கலைகள் - ஒன்பது
9. மாய்கலைகள் - ஒன்பது
என்று ஒன்பது வகைப்பட்ட கலைகளை அருளியுள்ளனர். இவற்றின் விரிவான செயல்வடிவங்கள் இருக்கு வேதத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்ட மற்ற மூன்று வேதங்களில் இருக்கின்றன.