01:48:05
இருக்குவேதம் காண்டம்-1, மண்டலம்-48, நாள் உரைக்கோவை வாசகம் 5
நான்கு வேதங்களிலும் மிகமிகத் தெளிவாக பெயரிடப்பட்டு வடிவமைப்பும், வாழ்வியலும், விருப்பமும், அருளாற்றலும் அமைக்கப்பட வேண்டிய கோயிலமைப்பும், உண்ணாழியின் அமைப்பும், கருவறை அமைப்பும், மூலவர் அமைப்பும், எழுந்தருளி அமைப்பும், ... முழுமையாக விளக்கப் பட்டுள்ள நிலையில் உள்ள கடவுள்கள் மொத்தம் 8,84,736 (எட்டு இலட்சத்து எண்பத்து நாலாயிரத்து எழுநூற்று முப்பத்தாறு) ஆகும். இப்பட்டியல் அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியான முத்தமிழ் மொழியின் அண்டபேரண்டங்கள் அளாவிய வளர்ச்சியினையும், காலத் தொன்மையினையும், மேன்மையினையும், வளர்ச்சியின் நுண்மையினையும், திண்மையினையும், ஒண்மையினையும், திட்டமிடப்பட்ட கட்டுக்கோப்பான பாங்கினையும், கோடிக்கணக்கான சொற்கள் குவிந்து கிடக்கின்ற அருமையினையும், பெருமையினையும் விளக்குகிறது, விளக்குகிறது, விளக்குகிறது. எனவேதான், “ஒவ்வொரு தமிழனும், தன்னுடைய தாய்மொழியான முத்தமிழ் மொழி ஒரு கடவுள் மொழி, தேவமொழி, தெய்வமொழி, ஆண்டவர் மொழி, வேதமொழி, இளமைமாறாத கன்னிமொழி, பிறப்பிறப்பற்ற இறைமைமொழி, அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழி என்பதனை உணர்ந்து முத்தமிழ்மொழியின் உரிமையையும், பெருமையையும் போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்திட தன்னுடைய இன்னுயிரையும் ஈயத் தயாராய் இருக்க வேண்டும்” என்று இருக்குவேதம் மிகத் தெளிவாக விளக்குகிறது.
இந்துமதம் என்பதற்கு முப்பத்தாறு (36) நூல்கள் எழுதப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நூலிலும் 4800 (நாலாயிரத்து எண்ணூறு) இந்துமதக் கருத்துரை வாசகங்கள் கூறப்பட்டிருக்கின்றன.
இந்துமதத்திற்குரிய முப்பத்தாறு (36) நூல்களிலும் கூறப்பட்டுள்ள மொத்த இந்துமதக் கருத்துரை வாசகங்கள் 1,72,800 (ஒரு இலட்சத்து எழுபத்திரண்டாயிரத்து எண்ணூறு) என்று பட்டியலிடப் பட்டுள்ளன.
இப்படி பதினெண்சித்தர்கள் வேதநூல்களின் கருத்துச் சொற்றொடர்களையும், சுலோகங்களையும், இந்துமதக் கருத்துரை வாசகங்களையும் பட்டியலிட்டுக் காட்டியிருப்பதற்குக் காரணம் வேறு யாரும் புதிதாக எழுதி இவற்றில் சேர்த்து விடாமல் இருப்பதற்காகத்தான் என்று இந்துவேத நூல்களையும், இந்துமத நூல்களையும் அருளியுள்ள ஆதிசிவனார் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.