01:47:05
இருக்கு வேதம் காண்டம்-1, மண்டலம்-47, நாள் உரைக்கோவை வாசகம்-5
“பத்தியாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புகிற குடும்ப ஆண்டவர்கள், குலதெய்வங்கள், கிராமத்து தேவர் தேவதைகள், நாட்டுக் கடவுள்கள் முதலியவர்களிடமும்; அலைந்து திரியும் காற்று, கருப்பு, பேய், பிசாசு முதலியவற்றிடமும் பத்தி செலுத்துவதற்காக தங்களுடைய வசதி வாய்ப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப பலி பொருள்களையும், படையல் பொருள்களையும், மற்ற பூசனைப் பொருள்களையும் படைத்து தம் விருப்பம் போல் குரல் எழுப்பியும், பாடல்பாடியும், கருவிகளை இசைத்தும், ஆட்டங்கள் ஆடியும், பரவிடுதற்குரிய நெறிகளாக பூசைநெறிகள், வணங்கும் நெறிகள், வழிபடும் நெறிகள், கும்பிடும் நெறிகள் எனும் நான்கு வகை நெறிகள் திட்டவட்டமாக விளக்கமாக அருளப்பட்டுள்ளதை தெரிந்து, அறிந்து, ஆராய்ந்து, புரிந்து, தெளிந்து, உணர்ந்து, நம்பி ஏற்று, ஒப்புக்கொண்டு விருப்பத்தோடு செயலாக்குபவர் நிறைவான பயனைத் துய்ப்பர்.”