05:17:16
இருக்கு வேதம் காண்டம்-5, மண்டலம்-17, நாள் உரைக்கோவை வாசகம் 16
இப்பூவுலகத்தார்க்கு, இப்புவிப் பரப்பார்க்கு, இப்பூமியார்க்கு, இவ்வையகத்தார்க்கு, இம்மாஞாலத்தார்க்கு, இவ்வுலகத்தார்க்கு அண்டபேரண்ட அருளாட்சி நிகழ்த்தும் மூலப் பதினெண்சித்தர்கள் அருளிடும் ‘அடிப்படையான அருளுலகப் பேருண்மையானவது; விண்ணுலகிலிருந்து வந்த கடவுள்களானாலும் சரி, மண்ணுலகிலிருந்து உருவான கடவுள்களானாலும் சரி; அவர்கள் முதன்முதல் தங்கிச் செயல்பட்டிடும் நாட்டையும், மொழியையும், இனத்தாரையும், இனத்தாரின் உறவுமுறை, உடைமுறை, உணவுமுறை, கலைமுறை, மற்ற பழக்க வழக்க நெறிமுறை ... முதலியவைகளை மட்டுமே என்றென்றும் விரும்பிடுவார்கள். இதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். அதனால், அந்தந்த நாட்டு மக்கள் தங்களுடைய நாட்டுக்குரிய கடவுளர்களிடத்து மட்டுமே பத்தி செய்து பயனடைய வேண்டும். அந்தந்த இனத்து மக்கள், தங்களுடைய இனத்துக்குரிய கடவுளர்களிடத்து மட்டுமே பத்தி செய்து பயனடைய வேண்டும்; அந்தந்த மொழிக்குரிய மக்கள், தங்களுடைய மொழிக்குரிய கடவுளரிடத்து மட்டுமே பத்தி செய்து பயனடைய வேண்டும்”.
குறிப்பு: இதே கருத்து அசுரவேதம், அதர்வான வேதம், யாம வேதம் மூன்றிலும் மேலும் தெளிவாக விளக்கப் படுகின்றது.