48:46:46
இருக்கு வேதம் காண்டம்-48, மண்டலம்-46, நாள் உரைக்கோவை வாசகம் 46
“அனாதிக் காலத்தில் தோன்றிட்ட எண்ணூறுக்கும் மேற்பட்ட வேதங்களும், வேதமதங்களும் அருளுலகைப் பற்றிய வளர்த்திட்ட தவறான கற்பனைகள், முறைகேடான கதைகள், பொய்யான சரித்தரங்கள், சரித்திரங்கள், சரித்திறங்கள், பயனில்லாத மந்தர மந்திர மந்திறப் பூசைமொழிகள், வாய்மையற்ற பூசைவிதிகள், உய்வைத் தரமுடியாத போலியான மதச் சடங்குகள்.... முதலியவற்றால் விளைந்திட்ட அருளுலக அறியாமைகளை அகற்றிட ஆதிசிவனாரும், அவரது திருமகனார் முருகப் பெருமானாரும், இவர்கள் உருவாக்கிய நாற்பத்தொன்பது திருவிடத்தைச் சேர்ந்த இந்தியாக்களூம், திருவிடத்துச் செயல்வீரரான திராவிடர்களும் முயன்று முயன்று உரிய பயன்கள் பெரிய அளவில் விளையாமையால்; ஆதிசிவனாரின் திருமகனான முருகப் பெருமான், தம் தந்தைக்கே இந்துவேத இந்துமதப் பிறணவங்களின் இயலாமைகளை விளக்கி அருளுரை வழங்கினார். அதன் பயனாக ஆதிசிவனாரும், விண்ணுலக ஐவர் குழுவையும், மண்ணுலக ஐவர் குழுவையும் ஒன்று கூட்டி இருக்கு வேதத்தில் வாக்காகக் கூறப்பட்டுள்ளவைகளைத் தனித்தனியாகப் பிரித்து அசுரவேதம் என்றும், வாக்கியங்களாகக் கூறப்பட்டுள்ளவைகளைத் தனியாகப் பிரித்து அதர்வான வேதம் என்றும், வாசகங்களாகக் கூறப்பட்டுள்ளவைகளைத் தனியாகப் பிரித்து யாமவேதம் என்றும் அருளுலகில் ஈடுபடக் கூடிய அருளாளர்களுக்காக, ஆன்மீக வாதிகளுக்காக, பத்தியாளர்களுக்காக, ஆத்திகர்களுக்காக, திருவிடப் பணிகளைச் செய்யும் திராவிடர்களுக்காக ஒரே வேதமாக இருந்த இந்துவேதத்தை நான்கு வேதங்களாக ஆக்கினார். இவற்றை அறிவிக்கும் வண்ணமாக இருக்கு வேதத்தின் இறுதியிலும், மற்ற மூன்று வேதங்களின் ஆரம்பத்திலும், ‘அருளுலக அறியாமைகள் அகலட்டும்’ என்று தலைப்பிட்டே அருளுலகு பற்றிய பல உண்மைகளை மிகத் தெளிவாகவும், திட்டவட்டமாகவும் ஐயமற எளிமையாகப் புரிந்து கொள்ளூம் வண்ணம் விளக்கங்கள் அருளப் பட்டுள்ளன. அவை இருக்குவேதத்தில் காண்டம்-49இல் மண்டலம்-47இல் 48 உரைக்கோவை வாசகங்களிலும் விளக்கப் பட்டுள்ளன. இவையே மற்ற மூன்று வேதங்களின் காண்டம்-1இல் மண்டலம்-2இல் உள்ள 48 வாக்குகளிலும், வாக்கியங்களிலும், வாசகங்களிலும் விளக்கப் பட்டுள்ளன.