04:11:23
இருக்கு வேதம் காண்டம்-4, மண்டலம்-11, நாள் உரைக்கோவை வாசகம்-23
“மனித வாழ்க்கையில் பிறந்த நேரத்தை வைத்தும், சூட்டப்படுகின்ற பேரை வைத்தும், கையிலும் கழுத்திலும் நெற்றியிலும் உள்ள வரிகளை (இரேகை) வைத்தும், உடல் உறுப்புக்களின் அமைப்புக்களை வைத்தும், வாழ்ந்து கொண்டிருக்கின்ற இருப்பிடத்தை வைத்தும் மனித வாழ்க்கையில் ஏற்படக் கூடிய நன்மை தீமைகளையும், இழப்பு ஈட்டங்களையும், நோய்நொடிகளையும், தேக்க வீக்கங்களையும் முன்கூட்டியே கணித்துக் கொள்ளும் கலைகளும், வரக்கூடிய சிக்கல்களுக்கும், சோதனைகளுக்கும் செய்யக்கூடிய பரிகாரங்களும் விளக்கப்பட்டிருக்கும் இந்துவேத நூல்களையும், இந்துமத நூல்களையும் உடையதுதான் ஓர் இந்துமத வாழ்க்கை.”