07:19:30
இருக்கு வேதம் காண்டம்-7, மண்டலம்-19, நாள் உரைக்கோவை வாசகம் 30
“அண்டபேரண்டமாளும் மூலப் பதினெண்சித்தர்கள் அருட்கொடையாக வழங்கியுள்ள இந்துவேதத்திலும், இந்துமதத்திலும் அறிவுக் கொடையாக உள்ள குண்டலினி, குண்டளினி, குண்டழினி ஆசிரமப் பயிற்சிகளும் ஓகாசன, யோகாசன, மோகாசன, போகாசன, தவப் பயிற்சிகளும் பூசைவிதிகளில் கூறப்பட்டிருக்கும் 1. கஞ்சா இலை, 2. கசகசா பால், 3. தென்னமரத்துக் கள், 4. பனைமரத்துக் கள், 5. ஈச்சமரத்துக் கள், 6. பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, 7. தேன், 8. பால், 9. கருப்பஞ்சாறு, 10. வில்வம், 11. துளசி, 12. வெட்டிவேர், 13. பறவைகளின் பசுங்குருதி, 14. வெள்ளாட்டுக் குட்டியின் பசுங்குருதி, 15. எள்நெய், 16. உண்ணுதற்குரிய நீர்வாழ், நிலம்வாழ் உயிரின இறைச்சி, ... முதலியவை முறையாக பெண்களில் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்திற்கு ஏற்பவும், ஆண்களில் பாலுகர், சிறாஅர், இளைஞர், நட்டாள், பெரியவர், முதியவர், கிழவர் எனும் ஏழு பருவத்திற்கேற்பவும் பயன்படுத்தியும், இந்துவேத உணவு முறையால் நோயற்ற நல்வாழ்வையும், மரணமிலாப் பெருவாழ்வையும் பெற்றிடலாம்.”