Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேத சூலகங்கள் > இருக்கு வேதம் > 01:05:23

01:05:23

இருக்குவேதம்: காண்டம்-1, மண்டலம்-5, நாள் உரைக்கோவை வாசகம்-23:

1. இப்பூவுலகிற்கு அண்டபேரண்டங்களிலிருந்து வந்து கொண்டிருந்த அருளுலகத்தவர்களான திருக்கல், இந்துவேதமான இருக்கு வேதத்தை இம்மண்ணின் தலைவர்களான மணீசர்களுக்கு அனாதிக்காலம் எனப்படுகின்ற (4,85,920) நான்கு இலட்சத்து எண்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் காலம் பல்வேறு நிலைகளிலிருந்து எடுத்துக் கூறியும் பட்டறிவாக வழங்கியும் உரிய பயன் விளையவில்லை. இம்மண்ணுலக மணீசர்களுக்கிடையில் உடல் அங்கங்களின் வடிவ அளவு வேறுபாடுகளாலும், உடல் வண்ண வேறுபாடுகளாலும், மொழி வேறுபாடுகளாலும், வாழிடமாகிய நாடு என்ற எல்லை வேறுபாடுகளாலும், இயற்கையாக ஏற்பட்டிருந்த எண்ணூறுக்கும் மேற்பட்டிருந்த இனப்பிரிவு வேறுபாடுகளை இணைக்க முடியவில்லை. இணைக்க முடியவில்லை, இணைக்க முடியவில்லை, இணைக்கவே முடியவில்லை. இவர்களுக்கிடையில் தோன்றிய அருளுலக அநுபவசாலிகளால் தங்கள் தங்கள் போக்கில் ஆளுக்கொரு கடவுளின் பெயரைச் சொல்லி அக்கடவுள் பெயரால் உருவாக்கப் பட்டிட்ட கதைகள், புராணங்கள், பூசைவிதிகள், நடைமுறைகள், மந்திரங்கள் முதலியவற்றால் உருவாகிட்ட வேதங்களுக்குரிய வேதமதங்களின் அடிப்படையில் ஓயாது ஒழியாது சண்டைகளும், சச்சரவுகளும், கலவரங்களும், போராட்டங்களும், போர்களும் காட்டுத்தீ போல திடீர் திடீர் என்று பற்றி எரிந்து பேரழிவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. இவற்றை யெல்லாம் சரி செய்திட; அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள் ஏழாயிரம் கல் தொலைவிற்கு விரிந்து பரந்து கோணல் மாணலாக எண்ணற்ற நீண்ட குறுகிய அகன்ற முள்மரத்துச் சிம்புகள் போல் நிலப்பரப்புக்களைப் பெற்றிருந்த முற்றாத, கடினப்படாத, மென்மையான, பொருபொருப்பான புதைமண் பரப்புக்களை மிகுதியாகப் பெற்றுத் திகழ்ந்த இளமுறியாக் கண்டத்தைச் சுற்றியிருந்த தண்ணீர் கோளப் பெரும்பரப்பிற்கு இந்துவேதத்தின் பெயரால் இந்து மாக்கடல் என்ற பெயர் வைக்கப்பட்டது போல் இம்மண்ணீசர்களின் மனக்கடலுக்கு இந்துவேதம் என்று பெயரிட; ..... நிலைத்திட இந்துவேதத்தை முறைப்படி இம்மண்ணுலகில் நிலைநாட்டிட முடிவெடுத்தனர். அதற்காக, பதினெண்சித்தர் குழுவின் தலைவரான ஆதிசிவனாரை இம்மண்ணுலகுக்கு அனுப்பினர். அவரும், தமது பதினெண்சித்தர் குழுவோடும், துணைவர்களான பதினெட்டாம்படிக் கருப்புக்களோடும், மற்றவர்களோடும் இளமுறியாக் கண்டத்தில் இந்துவேதத்தையும், இந்துமதத்தையும் அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியும், அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியையும் மணீசர்களுக்குக் கற்றுக் கொடுத்து வளர்த்துப் பரப்புவதற்காக இளமுறியாக் கண்டத்தின் வடக்குப் பக்கத்திலிருந்த பனிமூடிய விண்ணுயர்ந்த மலைமுகடுகளை உடைய குளிர்ச்சி மிக்க மலை எனும் பொருளில் அழைக்கப்பட்ட வட இமயமலை முதல் தென் கோடியில் இந்த இளமுறியாக் கண்டத்தின் பிறப்பு நிலைக்குரிய விந்தின் நிலையை விளக்கும் கற்பாறைகளை யுடைய விந்திய மலைக்கும் இடையே நாற்பத்தொன்பது (49) திருவிடங்களைத் தேர்ந்தெடுத்தார். இந்த இடங்களில் விண்ணுலக அருளுலகத்தைச் சேர்ந்தவர்களான திருக்களும், மண்ணுலக அருளுலகத்தைச் சேர்ந்தவர்களான திருக்களும் (திரு = அருளுலகத்தவர்) ஒன்று கூடிச் செயல்படக் கூடிய திராவிடங்கள் எனும் நிறுவன நிர்வாகங்கள் உருவாக்கப் பட்டிட்டன. இவைகள் செயல்பட்டு கிராமங்களையும், ஊர்களையும், நகரங்களையும் வளர்த்து திராவிட நாடுகள் இந்துவேதத்தையும்; இந்துமதத்தையும் அருளாட்சிக்குரிய மொழியான அருளூறு அமுதச் செம்மொழியான முத்தமிழ் மொழியையும், இம்மண்ணுலகில் பரப்பிடும் பணியையும், பாதுகாத்திடும் பணியையும் நிறைவேற்றின. இப்படி உருவான நாற்பத்தொன்பது (49) திராவிட நாடுகளும், இந்துவேத அருட்செல்வங்களும், இந்துமத அருட்செல்வங்களும் யாண்டும் பரவியிருக்குமாறு செய்யப்பட்ட நிலப்பரப்புக்களே இந்தியாக்களாக மாறின. இம்மண்ணுலகத்தைப் பொறுத்தவரை ஒன்பது (9) கோள்கள், பன்னிரண்டு (12) இராசிகள், இருபத்தேழு (27) விண்மீன்கள் எனும் நாற்பத்தெட்டும் சேர்ந்துதான் அனைத்துவகைப்பட்ட பயிரினங்களையும், உயிரினங்களையும் இயக்குகின்றது என்பதால்தான் ஆதிசிவனார் முதன்முதல் தென்இமயமலை அடிவாரத்தில் இந்து ஆறு, யமுனை ஆறு, கங்கை ஆறு எனும் மூன்று ஆறுகளும் கூடுகின்ற முக்கூடல் பகுதியில் முதன்முதல் உருவாக்கிய முத்தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்ட மோகம்சிதறா நகர், மோகம்சிதறா நகரின் புறநகர் பகுதியான மருதமரக் காட்டிடையே உருவாக்கப்பட்ட முக்கூடல் எனும் ஆலவாய் மருதை மாநகர் இவை இரண்டுக்கும் அருகிலேயே உருவாக்கப்பட்ட அருட்பாநகர் எனும் மூன்று பெருநகரங்கள் மூலம் உருவாக்கப்பட்ட முதல் திருவிடத்தை திராவிடத்தை, திராவிட நாட்டை அருளுலகத் தலைமை இடமாகக் கொண்டுதான் இதன்கீழ் நாற்பத்தெட்டு திருவிடங்கள், திராவிடங்கள், திராவிட நாடுகள் தோற்றுவிக்கப் பட்டன. இந்த நாற்பத்தெட்டும் முறையே ஒன்பது கோள்களின் பெயர்களையும், பன்னிரண்டு இராசிகளின் பெயர்களையும், இருபத்தேழு விண்மீன்களின் பெயர்களையும் பெற்றுத் திகழ்ந்தன. இந்த (48) நாற்பத்தெட்டு திராவிட நாடுகளையும் சேர்த்து, இவற்றைத் தலைமை தாங்கி இயக்கிய இமயமலை முக்கூடல் திராவிட நாடு உட்பட மொத்தம் நாற்பத்தொன்பது திராவிட நாடுகள் அண்டபேரண்டம் முழுதும் அருளாட்சி செய்யும் இந்துவேத, இந்துமத அருட்கொள்கைகளை, அருட் கோட்பாடுகளை, அருட் குறிக்கோள்களை, அருள் நெறிமுறைகளை, அருள் நடைமுறைகளை, அருள்விதிகளை, அருள் நீதிகளை, அருள் நியதிகளை, அருள் வாழ்வியல் பழக்க வழக்கங்களை முறையாகக் கற்பித்து வளர்க்கின்றன, முறையாகக் கற்பித்து வளர்க்கின்றன, முறையாகக் கற்பித்து வளர்க்கின்றன.
இத்திருவிடங்களால்தான், இத் திராவிட நிறுவன நிர்வாகங்களால்தான், இத் திராவிட நாட்டவர்களால்தான், இந்த உலக மக்கள் அனைவரையும் இணைத்துப் பிணைத்து ஒற்றுமைப்படுத்தி, நல் உறவோடும், சமத்துவ சகோதரத் தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவோடும், அமைதியோடும், மகிழ்வோடும், நிம்மதியோடும், நிறைவோடும் வாழ்வதற்குரிய உலக ஆன்ம நேய ஒருமைப்பாடு என்றென்றும் கருக்கொண்டிருக்கச் செய்யப்படுகின்றன. இக்கருவினை வளர்க்கும் தாயாகவே நாற்பத்தொன்பது திராவிட நாடுகளாலும் உருவாக்கப்படுகின்ற நாற்பத்தொன்பது இந்தியாக்களும்; அப்பாற்பட்டு முரண்பட்டு, வேறுபட்டு, மாறுபட்டு, தவறான வேதங்களையும், வேதமதங்களையும் பெற்றுத் திகழும் நாடுகளையும், காலப்போக்கில் அண்டபேரண்ட அருளுலக ஆட்சிமொழியும், அருளூறு அமுதச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியின் பூசைமொழிகளும், பூசைவிதிகளும், தத்துவங்களும், செயல் சித்தாந்தங்களும்தான் திருத்திப் பண்படுத்திப் பாதுகாக்கப் போகின்றன.
[இருக்கு 1:5:23]

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே