46:03:00
இருக்கு வேதம் காண்டம்: 46, மண்டலம்: 3, 8, 13, 19, 23, 35, 39, 43, 48
இந்து வேதம் இறந்தவர்க்காக அழுது புரண்டு அழுவதை, அச்சமுற்று வருந்தி கலங்கிக் குழம்புவதை முழுமையாகக் கண்டிக்கிறது; அதைத் தடுத்து நிறுத்தி இறந்தவர் அதாவது மாண்டவர் கடவுளாகி இருக்கிறார் என்ற மகிழ்ச்சியைக் கொண்டாடும்படிச் செய்கிறது.
இப்படிப் பிணச் சடங்குகள், இவற்றின் தத்துவங்கள், செயல் சித்தாந்தங்கள், இவற்றில் பயன்படுத்தக் கூடிய பூசைமொழிகள், பூசை விதிகள், கடைப்பிடிக்கக் கூடிய நடைமுறை சடங்குகள், அவற்றின் விளக்கங்கள் முதலியவைகள் இருக்கின்றன.