48:02:05
இருக்குவேதம் காண்டம்-48, மண்டலம்-2, நாள் உரைக்கோவை வாசகம்-5:
“விலங்குகளைப் போல், வெறியுணர்வு கொண்டு தனித்தனியாக அலைந்து திரிகின்ற மணீசர்களை குடும்பமாகவும், சமுதாயமாகவும், அரசியல் பாதுகாப்புப் பெற்ற பக்குவப்பட்ட வாழ்வியலை ஏற்று நடத்தக் கூடிய பண்பட்ட மனதையுடைய மனிதர்களாக மாற்றுவதற்கு 1.அருட்கலைகள் நாற்பத்தெட்டு, 2. ஆயகலைகள் அறுபத்திநான்கு, 3.கடவுட்கலைகள் ஒன்பது, 4.தெய்வீகக் கலைகள் ஒன்பது, 5.பேய்க்கலைகள் ஒன்பது, 6.நோய்க்கலைகள் ஒன்பது, 7.தேய்கலைகள் ஒன்பது, 8.ஓய்கலைகள் ஒன்பது, 9.மாய்கலைகள் ஒன்பது ... எனும் ஒன்பது கலைகள் வழங்கப்பட்டாலும் மானுடர் ஞானம், அகஞானம், புறஞானம், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் எனும் ஐந்தில் பொருளுலகச் சித்திக்குரிய நான்காவதைப் போற்றிப் பேணினால் வீழ்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் உள்ளாவர்.