Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 9

பத்தி 9

இந்துவேதம் கணக்கற்ற தனித்தனிப் பிரிவுகளை உடையாதாகும். அதாவது அருளுலகப் பொருளுலக வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து வகைப்பட்ட செய்திகளும் மிகமிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட தனித்தனித் துறைகளாகப் பிரித்து வகுத்து வழங்கப் பட்டிருக்கின்றன.

இவற்றுக்குள் அடங்காத உணர்வுகளோ, எண்ணங்களோ, கருத்துக்களோ, செயல்களோ, செய்திகளோ எதுவும் இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை, இருக்க முடியாது, இருக்க முடியாது, இருக்க முடியாது.

எனவேதான், இந்த இந்துவேதம் அல்லது இந்த இந்து வேத மதமான இந்து மதம் ஒரு சமுதாய இயலே ஆகும் என்று பதினெண் சித்தர்களால் மிகத் தெளிவாகப் பல இடங்களில் எழுதப் படுகிறது.

மேலும் பதினெண் சித்தர்களே, இந்த இந்து வேதமே இந்த உலகில் தோன்றிடக் கூடிய அனைத்து வேதங்களுக்கும் விதைப் பண்ணையாக, நாற்றுப் பண்ணையாக என்றென்றும் இருந்திடும் என்று மிகமிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் பல இடங்களில் எல்லா நூல்களிலும் குறிப்பிடுகிறார்கள்.

இது பற்றி, பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் விளக்கம் அளிக்கும் பொழுது இந்து வேதம், இம்மண்ணுலக வேதங்களுக்கு எல்லாம் தாயாகவும், மூலமாகவும், முதலாகவும், அடிப்படையாகவும், உள்ளீடாகவும், உயிராகவும் விளங்குகிறது,

எனவேதான், இந்த இந்து மதத்தில் மதமாற்றம் பற்றிய கருத்தோ, சிந்தனையோ எள்முனையளவு கூட இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை என்று மிகத் தெளிவாகக் குறிக்கிறார்கள்.

அதாவது, பெயரளவில் இம்மண்ணுலகில் எத்தனை மதங்கள் இருந்தாலும் சரி, எத்தனை எத்தனைக் கோயில்களும், வழிபாட்டு முறைகளும் தோன்றினாலும் சரி; அனைத்தும் இந்து வேதத்துக்கு உட்பட்டவைதான் என்ற கருத்தையே பதினெண் சித்தர்கள் அழுத்தந் திருத்தமாக, ஆணித் தரமாகக் கூறுகிறார்கள், கூறுகிறார்கள், கூறுகிறார்கள்.

எனவேதான், இந்துமதம் யாண்டும் பரவியுள்ள இந்துமத இந்தியாவிற்குள் எத்தனை எத்தனை அன்னிய வேத மதங்கள் வந்து என்னென்ன கடுமைகளையும், கொடுமைகளையும் சிதைவுகளையும், சீரழிவுகளையும் செய்திட்டாலும் அவற்றோடு நிலையான போட்டி பொறாமைப் போராட்டங்களையோ, பகைமைப் போர்களையோ உருவாக்காமல் வாழுகிறது.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே