பத்தி 4
இந்து என்ற சொல் தருகின்ற செய்திகள், வேதம் என்ற சொல்லால் மட்டுமே சிறப்பாகக் குறிக்கப்படுவதுதான் மரபாக இருக்கிறது. இந்த உண்மையை, விளக்கிட,
- இந்துவேத மதமான இந்துமதம்
- இந்துமதத்தின் இந்துவேதம்
- அண்ட பேரண்டமாளும் இந்துவேதம்
- அண்டபேரண்ட அருளுலக ஆட்சி மொழயான அருளூறு தெய்வீகச் செந்தமிழ் நிலையாக என்றென்றும் வாழும் இந்துவேதம், அருளுலகைப் பற்றி மெய்யான செய்திகளைத் தருகின்ற இந்து வேதம்.
- கடவுள்களாலேயே காலங்கள் தோறும் மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் இந்து வேதம்.
- மனிதன் கடவுளைச் சந்தித்திட வழியாக வழிகாட்டியாக வழித்துணையாக இருக்கின்ற இந்து வேதம்.
- மனிதர்களுக்குத் தேவையான போது கடவுளர்களே நேரில் வந்து உதவி செய்திடச் செய்யும் வேதம் இந்து வேதம்.
- மனிதர்கள் கடவுளாகிடுவதற்கு உதவும் இந்து வேதம், கடவுளர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள், பிறப்பிறப்பற்ற பெருநிலை பெறுகிறார்கள் எனும் முப்பெரும் அருளுலக உண்மைகளை தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கிக் கூறும் இந்து வேதம்.
- கடவுள்களில் மண்ணுலகக் கடவுள்கள்; மண்ணுலகு கடந்த எழுலகக் கடவுள்கள் (விண்ணுலகக் கடவுள்கள்) என்று கடவுள்களில் இருபெரும் வகையினர்கள் இருக்கின்றார்கள் என்ற பேருண்மையை விளக்குகின்ற இந்து வேதம்.
- கடவுள்களில் தாங்களாகவே தோன்றுகின்ற கடவுள்கள் என்றும், அருளாற்றல் மிக்கவர்களால் தோற்றுவிக்கப் படுகின்ற கடவுள்கள் என்றும் இருபெரும் வகையினர் உண்டு என்ற பேருண்மையினை மிகமிகத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கமாகவும் கூறுகின்ற இந்து வேதம்.
- மனிதர்கள் அடிக்கடி நேரில் வந்து, பார்த்து பாதுகாத்து வழி நடத்துபவர்கள் கடவுள்கள் என்று கூறும் இந்து வேதம்.
- பேரார்வத்தினால் முறையான பயிற்சிகளையும், நிறைவான முயற்சிகளையும் தக்க குரு வழியாகச் செய்து சத்தி, சித்தி, முத்தி பெறுபவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்கள் கண்டு களித்திடக் காட்சி தருபவர்களே கடவுள்கள் என்று கூறும் இந்து வேதம். பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் அருளுரைகள், அருளார்ந்த அறிவுரைகள், அறிவுரைகள், அறிவார்ந்த அருளுரைகள் எனும் நான்கினுக்குள் அடங்குபவர்களே மெய்யான கடவுள்கள் என்று கூறும் இந்து வேதம்.
- கடவுள்களில் ஆண், பெண், அலி என்ற மூன்று பெரும் வகைப்பட்ட வெவ்வேறான நிலைகளை உடைய கடவுள்கள் இருக்கின்றார்கள் என்ற பேருண்மையினை மிக மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், விளக்கமாகவும் கூறுகின்ற இந்து வேதம்.
- கடவுள்களில் 48 வகையினர்கள் தர, திர, திறங்களுக்கேற்பப் பிரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற பேருண்மையினை நறுக்குத் தெறித்தாற்போல் பிசிறின்றி மிகமிகத் தெளிவாகவும், எளிமையாகவும், விளக்கமாகவும் கூறுகின்ற இந்து வேதம்.
- கடவுள்கள் மனிதர்களுக்கு முதலாளிகளோ அரசர்களோ அல்ல, அவர்கள் மனிதர்களுக்குத் தாய் போன்றவர்கள் என்று கடவுள்களின் உண்மையான நிலையினை மிக மிகத் தெளிவாகவும், எளிமையாகவும், விளக்கமாகவும் கூறுகின்ற இந்து வேதம்.
- எந்ததெந்த நாட்டில் எந்தெந்த இனத்தவருக்காக எந்தெந்த தொழியில் எந்தெந்த கடவுள் வேதத்தைக் கூறகிறாரோ, அந்தந்த கடவுளும் வேதமும் அந்தந்த நாட்டுக்கும், மொழிக்கும் இனத்துக்கும் மட்டுமேதான் உரியன என்று மிகமிகத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கமாகவும் கூறுகின்ற இந்து வேதம்.
- குறிப்பிட்ட கடவுளும் வேதமும் குறிப்பிட்ட நாட்டுக்கும் மொழிக்கும் இனத்திற்கும்தான் உரியவை என்ற பேருண்மையை விளக்குகிற இந்து வேதம்.
- ஆவி ஆன்மா ஆருயிர் என்ற மூன்றும் இணைந்து உருவாகும் சிவனின் வடிவமே இலிங்கம் என்ற பேருண்மையை நேரடியாக எளிமையாக விளக்குகின்ற இந்து வேதம்.
- ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் முற்பிறப்பு மறுபிறப்பு இப்பிறப்பு என்ற முக்கோண பீடத்துக்கு உட்பட்டே இயங்குகிறது என்ற பேருண்மையினைத் தெளிவாகவும் நேரடியாகவும் விளக்குகின்ற இந்து வேதம்.
என்றிப்படி இந்து வேதம் பற்றிய கருத்து விளக்கச் சொற்றொடர்கள் பதினெண் சித்தர்களின் நூல்களிலும், பதினெட்டாம்படிக் கருப்புகளின் நூல்களிலும், 48 வகைச் சித்தர்களின் நூல்களிலும், பதினெண் சித்தர் பீடாதிபதிகளின் குரு பாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம் எனும் முப்பெரும் இலக்கியங்களிலும் ஏராளமாகக் காணப் படுகின்றன. ஏராளமான காணப் படுகின்றன, ஏராளமாகக் காணப் படுகின்றன. எனவேதான் இந்து மதத்தைப் பொறுத்தவரை இந்து வேதம் என்ற சொல்லே இந்து மதத்தின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் செயல் நடைமுறைகளையும் விளக்குகின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது.