பத்தி 7
இந்து மத வரலாறு, இம்மண்ணுலகில் இந்து மதம் தோற்றுவிக்கப்பட்ட இடம், காலம், இந்து மதத்தின் அடிப்படையான உயிர்நாடியான இந்து வேதம், இந்து வேதத்தின் 108 பூசை மொழி நூல்கள், இந்து வேத்தின் 48 பூசை விதி நூல்கள், இந்து வேதத்தின் 96 தத்துவ நூல்கள், இந்து வேத்தின் 144 செயல் சித்தாந்த நூல்கள், இந்து வேத அருளாளர்கள், இந்து வேதக் கடவுள்கள், இந்து வேதக் கோயில்கள், இந்து வேதக் கருவறைகள், இந்து வேதக் கலைகள் முதலியவை அனைத்தும் அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் இருக்கின்றன என்ற பேருண்மையும்;
தமிழர்கள்தான் அருளுலகின் மூலவர்கள், காவலர்கள், தத்துவ வித்துக்கள், செயல் சித்தாந்த நாற்றுக்கள் என்ற பேருண்மையும் குறைக்கப்பட்டு மறைக்கப் படலாம், குறைக்கப்பட்டு மறைக்கப் படலாம், குறைக்கப்பட்டு மறைக்கப் படலாம்.
அதனால், அனாதி காலத்து மதமான இந்துமதம் அனாதையாக்கப் பட்டு விடலாம், அனாதையாக்கப் பட்டு விடலாம், அனாதை யாக்கப்பட்டு விடலாம் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான், பதினெண் சித்தர்கள் இந்து வேத்தை என்றென்றைக்கும் தலைமை தாங்கிக் காத்து வழி நடத்தும் பொறுப்பினைப் பதினெண் சித்தர் மடத்திடம் ஒப்படைத்தார்கள், ஒப்படைத்தார்கள், ஒப்படைத்தார்கள்.