பத்தி 16
இப்படி, இன்றுள்ள பதினெண் சித்தர் மடம் துவக்கியுள்ள அறிவார்ந்த அருட் பணிதான் அருளுலகப் பொருளுலக இருள்களை அகற்றும். அப்பொழுதுதான் இந்துமதம் தனது ஆழ்ந்த தூக்க, ஏக்க, வீக்க, முடக்க, அடக்க, ஒடுக்க, நடுக்க. . நிலைகளிலிருந்து விடுபட்டிடும், விடுபட்டிடும், விடுபட்டிடும்.
ஏனென்றால், பதினெண் சித்தர் மடம்தான். இந்து மதத்தின் தலைமை மடமாக, தலைமைக் குரு பீடமாக, குவலய குருபீடமாக, இந்து வேத பீடமாக, இந்து வேத நாயகமாக, இந்து மதத் தந்தையாக, இந்து மதத் தலைமை ஆச்சாரியாராக, இந்து மத மூலப் பண்டாரமாக, இந்து மத மூலப் பண்டார சந்நதியாக, இந்துமத மூலப் பண்டார சந்நிதியாக, இந்து மத மூலத் தம்பிரானாக, இந்து மத மூல ஆதீனமாக, இந்து மத மூலக் குருமகா சன்னிதானமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு, இந்து மதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்ததர்களாலும் பதினெட்டாம் படிக் கருப்புகளாலும் வழங்கப் பட்டதாகும்.
எனவேதான் இன்றுள்ள பதினெண் சித்தர் மடம் (காரணோடை, சென்னை-67) தனியொரு நிறுவனமாக இருந்தே மேலே குறிப்பிட்ட இந்து வேதத்திற்கும், இந்து மதத்திற்கும் உரிய அனைத்துத் துறைகளின் அல்லது அனைத்துப் பிரிவுகளின் அல்லது அனைத்து வகைப்பட்ட அங்கங்களின் மறுமலர்ச்சிக்காகவும், வளவளர்ச்சிக்காகவும், வலிமைச் செழிச்சிக்காகவும், ஆட்சிமீட்சிக்காகவும், பாடுபடப் புறப்பட்டிருக்கிறது, பாடுபடப் புறப்பட்டிருக்கிறது. பாடுபடப் புறப்பட்டிருக்கிறது.
இப்பேருண்மையினை இன்றுள்ள இந்துக்களில் கணிசமானவர்களாவது முறையாகவும், நிறைவாகவும் தெரிந்து, ஆராய்ந்து, அறிந்து, புரிந்து, தெளிந்து, உணர்ந்து, நம்பி, ஏற்றுத் தங்களால் இயன்ற துணைகளையும், ஏந்துக்களையும், ஆதரவுகளையும் நல்கிட முன் வந்தாலேயே போதும், போதும். போதும்.