பத்தி 23
மேலே குறிப்பிட்டது போல் பல்வேறு வகைப்பட்ட அறிவுகள் கலை இயல்களாகவும், அறிவியல்களாகவும் தோற்றுவிக்கப் பட்டுள்ளது இந்து வேதத்தில்.
ஆனால் இந்த இந்து வேதம் செயல் வடிவில் இந்து மதம் என்று வாழ ஆரம்பித்த பிறகு இதனுடைய அனைத்து வகைப்பட்ட அறிவியல்களும், கலையியல்களும் ஐந்து பெரும் வகைகளுக்கு உட்பட்டவைகளாக மிகத் தெளிவாகப் பகுக்கப்பட்டு விட்டன.
அவை முறையே (1) ஞானம், (2) அகஞானம், (3) புறஞானம், (4) விஞ்ஞானம், (5) மெய்ஞ்ஞானம் என்று ஐந்து வகைப்படும்.