பத்தி 27
என்றிப்படி, இந்து வேதம் என்று தலைப்பிட்டு முதல் யுகம் முடிந்து இரண்டாவது யுகத்தில் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகள் எழுத ஆரம்பித்து விட்டார்கள்.
அதாவது முதல் யுகம் முடிந்து மிகப்பெரிய கடல் கோள் ஏற்பட்டு, அதனால் இளமுறியாக் கண்டத்திலிருந்த தென் இமயமலையும், அதைச் சார்ந்த பெரும் பகுதியும் கடலுக்குள் மூழகி புதிய புதிய கண்டங்களும், சிறிய பெரிய தீவுகளும் புதிதாகத் தோன்றி; அங்கெல்லாம் பயிரினங்களும், உயிரினங்களும், மனிதர்களும் தோன்றி இரண்டாவது யுகத்தில் பல்வேறு இனங்களும், மொழிகளும், மதங்களும், இளமுறியாக் கண்டத்தோடு தொடர்பு கொண்டு வாழ்ந்திட்ட காலத்தில் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகளே இந்து வேதம், இந்து வேத மதமான இந்து மதம் என்று தலைப்பிட்டுப் பல நூல்களை எழுதினார்கள்.
அவை இந்து, வேதம், மதம், இந்து வேதம், இந்து மதம் என்ற ஐந்து சொற்களுக்கும் தனித் தனியாகப் பொருள் விளக்கம் கூறும் நூல்களாகவே சிறப்புற்று விளங்குகின்றன. காலப் போக்கில் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகள் இந்த ஐந்து தலைப்புக்களிலும் இந்து வேதம், இந்து மதம் என்ற இரண்டு தலைப்புக்களில் மட்டும் சிறப்பாக விளக்குகின்ற நூல்களை எழுதினார்கள்.