Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 10

பத்தி 10

இப்படி இந்து வேத மதமான இந்துமதம் எந்த அன்னிய மதத்தோடும் வேற்றுமையையோ, போட்டி பொறாமையையோ, சண்டை சச்சரவுகளையோ, கடும் போர்களையோ, நெடும் போராட்டங்களையோ வளர்த்துக் கொள்ளாத ஒன்றாக இருக்கின்ற பண்பினால் காலங்கள் தோறும் இந்து மதத்திற்கு நலிவும், மெலிவும் சிதைவும், சீரழிவும் தோன்றுவது இயற்கையாகி விட்டது.

ஆனால் இந்த நலிவும், மெலிவும், சிதைவும், சீரழிவும் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து வேத மதமான இந்து மதத்தைப் பெருமளவில் பாதிக்கும் நிலை வந்தவுடனே இந்து வேதத்தின் 48 வகைப்பட்ட கடவுள்களும், 48 வகைச் சித்தர்களும், 48 வகை வழிபடுநிலையினர்களும், மற்றும் அருளுலகத்தவர்களும் நேரிலேயே வந்து செயல்பட ஆரம்பித்திடுவார்கள்.

மேலும் தங்களுடைய நேரடி வாரிசுகளையும், திருத்தோன்றல்களையும், பத்தியாளர்களையும், சத்தியாளர்களையும், சித்தியாளர்களையும், முத்தியாளர்களையும், சித்து விளையாடல் காரர்களையும் தேவைக்கேற்ப நாடு முழுவதும் தோன்றச் செய்து செயல்படச் செய்திடுவார்கள்.

இவையனைத்தும் கணிசமான அளவு வளர்ச்சி பெற்ற பிறகு பதினெண் சித்தர் மடம், பீடம். .. அனைத்துக்கும் தலைமை தாங்கி வழி நடத்திப் பொருளுலக அருளுலக இருளகற்றும் அருளாட்சியினை அமைத்திடும், அமைத்திடும், அமைத்திடும்,

இதுதான் இந்துவேதம் அண்டங்கள், பேரண்டங்கள், அண்டபேரண்டங்கள் அனைத்திலும் என்றென்றும் நிலைத்து நிற்பதற்குரிய நிலையான செயல் திட்டமாகும்.

இத்திட்டமே, அண்ட பேரண்டமாளும் பதினெண் சித்தர்களாலும், பதினெட்டாம்படிக் கருப்புகளாலும் உருவாக்கப்பட்டதாகும்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே