Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 18

பத்தி 18

இந்த இந்து வேதம் ஆதிசிவனாரால்தான் சட்டப் பூர்வமாக இந்து மதமாக அறிவிக்கப் பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட ஆண்டை ஆரம்பமாகக் கொண்டுதான் இந்து மதத்தின் உகக் கணக்குகள் (யுகக் கணக்கு) கணக்கிடப்படும் மரபு தோன்றிற்று,

இதன்படி

கிரேதா யுகம்           -         17,28,080 ஆண்டுகள்
திரேதா யுகம்           -         12,90,000 ஆண்டுகள்
துவாபர யுகம்          -           8,64,000 ஆண்டுகள்
கலியுகம்(கி.பி.1991 வரை)     5,092 ஆண்டுகள்
                                      ____________________
                                            38,87,172 ஆண்டுகள்

இப்படி இந்துமதத்தின் நான்கு யுக ஆண்டுக் கணக்கு இன்று 1991 உடன் 38,87,172 ஆண்டுகள் ஆகின்றன. இதுதான், இந்துமதம் தோன்றி வளமான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள வரலாற்றுக் காலம்.

ஆனால் இந்து மத ஆண்டு என்ற ஒரு காலக் கணக்கீட்டை, இந்து மதத்தின் தந்தையான பதினெண்சித்தர் பீடாதிபதிகள் குறிப்பிடுகிறார்கள். அக்கணக்கில் இந்த நான்கு உக ஒட்டுமொத்தக் காலக் கணக்கீட்டுடன், இந்து மதம் வடிவப் படாமல் இந்து வேதம் மட்டும் இம்மண்ணுலகுக்கு அறிவிக்கப் பட்டிருந்து அனாதிக் காலம் எனப்படுகின்ற 4,85,920 ஆண்டுகளும் சேர்த்தே கணக்கிடப்படுகிறது.

இந்தக் கணக்கீட்டின்படி இந்துமத ஆண்டு என்ற காலக் கணக்கீட்டு முறை இந்தியா முழுவதும் இருந்து வருகிறது.

இதனுடைய விளக்கமாகத்தான் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தங்கள் தங்களுடைய காலங்களில் எழுதித் தொகுத்திடும் தொடர் வரலாற்று நூல்களான

  1. குரு பாரம்பரியம்,
  2. இலக்கிய பாரம்பரியம்
  3. அரச பாரம்பரியம்

எனும் முப்பெரும் நூல்களிலும் மிகத் தெளிவாக இந்துவேத மதமான இந்து மதத்தின் காலக் கணக்கீடு என்ற சொல்லைப் பயன்படுத்தியே தங்களுடைய வரலாற்றுச் செய்திகளை எழுதியிருக்கிறார்கள்.

இதன்படிதான் கலியுகம் 3001 முதல் 3251 முடிய வாழ்ந்திட்ட (250 ஆண்டுகள் - கி.மு 100 முதல் கி.பி 150 வரை) பத்தாவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதி யாற்றங்கரைக் கருவூறாரின் காலம் இந்து மத ஆண்டு 43,71,001 முதல் 43,71,251 வரை என்று முப்பெரும் வரலாற்று நூல்களிலும் குறிக்கப் படுகின்றது.

இதைப் போலவே கலியுகம் 3886 முதல் 4142 முடிய வாழ்ந்திட்ட (256 ஆண்டுகள் - கி.பி 785 முதல் கி.பி 1040 வரை) பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறாரின் காலம் இந்துமத ஆண்டு 43,71,886 முதல் 43,72,142 வரை என்று முப்பெரும் வரலாற்று நூல்களிலும் குறிக்கப் படுகின்றது.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே