பத்தி 8
பதினெண் சித்தர்கள், இம்மண்ணுலக முடிவுக்குள் ஏற்படக் கூடிய நான்கு யுகங்களிலும் வாழையடி வாழையென வரக் கூடிய பதினெண் சித்தர்களின் மரபில் மட்டுமே பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிப் பதினெண் சித்தர் மடத்தைத் தங்களுடைய வசதி வாய்ப்புக்களுக்கு ஏற்பத் தமிழகத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் உருவாக்கி இந்து மறுமலர்ச்சிக்காக, இந்து வேத வளவளர்ச்சிக்காக, இந்து மத ஆட்சி மீட்சிக்காக, இந்துக்களின் விழிச்சிக்காக, எழிச்சிக்காக, செழிச்சிக்காக எல்லாவகையான செயல்களையும் மேற்கொண்டிடுமாறு திட்டம் செய்து சென்றிருக்கிறார்கள்.
இதில் மாற்று வேதங்களையோ அல்லது மாற்று மதங்களையோ அல்லது வேற்று மத மக்களையோ நகைத்தோ, எதிர்த்தோ, பகைத்தோ, இழித்தோ, அழித்தோ, பழித்தோ எந்தவித கருத்தோ, உணர்வோட்டமோ ஊசி முனையளவு கூட இல்லை, ஊசி முனையளவு கூட இல்லை, ஊசி முனையளவு கூட இல்லை, ஊசி முளையளவு கூட இல்லவே இல்லை என்பதே குறிப்பிடத்தக்கது.
இதுவே, பதினெண் சித்தர்களுடைய, அருளுலகப் போதனைகளுடைய மேம்பாடுகளையும், சாதனைகளுடைய செம்மை நிலைகளையும் வெளிப்படுத்தும்.