Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 25

பத்தி 25

இந்த இந்துமதமே, இம்மண்ணுலகின் அருளுலகத்தைப் பொறுத்தவரை, அருளுலக விதைப் பண்ணையாகவும், அருளுலக நாற்றுப் பணையாகவும், உருவாக்கப்பட்டிட்டது.

எனவேதான், இந்த உலகில் முதன்முதல் தோன்றிய மிகப்பெரிய நிலப்பரப்பான இளமுறியாக் கண்டமெனும் குமரிக் கண்டத்தில் இந்து மதத்தின் அலுவலகங்களாகவும், செயலகங்களாகவும், உருவாக்கப் பட்டிட்ட அனைத்து வகையான நிறுவன நிர்வாகங்களும்; காலப்போக்கில் மூன்று கடல் கோள்களால் இளமுறியாக் கண்டம் சிதைந்து புதிய புதிய கண்டங்களும், சிறிய பெரிய தீவுகளும் தோன்றத் தோன்ற அங்கெல்லாம் உடனுக்குடன் உருவாக்கப்பட்டிட்டன.

அதாவது, அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்களும், பதினெட்டாம் படிக் கருப்புகளும், இவர்களைச் சேர்ந்தவர்களும், இம்மண்ணுலகோடு மிக நெருக்கமான தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், புதிது புதிதாக நிலப்பரப்புக்கள் தோன்றியவுடன் அங்குள்ள அருளுற்றுக்களை யெல்லாம் கண்டு பிடித்து முறையாக நாற்பத்தெட்டு (48) வகைக் கருவறைகளையும், 48 வகை வெட்டவெளிக் கருவறைகளையும், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகளையும், 48 வகைக் கோயில்களின் மூலக்கருவறைகளையும் தோற்றுவித்து அண்ட பேரண்டமாளும் இந்து மதம் வேரூன்றித் தழைத்திடும்படிச் செய்திடுகிறார்கள்.

எனவேதான் இந்த உலகம் முழுவதுமே இந்து மதம் பரவியிருக்கும்படியான நிலைமை உருவாயிற்று. மேலும், புதிது புதிதாகத் தோன்றிடும் நிலப்பரப்புக்கள் அனைத்திற்கும், கடல் கோள்களால் சிதைவுற்ற இளமுறியாக் கண்டத்தின் மக்களான நாகரீக முதிர்ச்சியடைந்த தமிழர்கள்தான் காலப்போக்கில் சென்று குடியேறினார்கள்.

அப்படி அவர்கள் குடியேறியபோது அங்கு இயற்கையாகவே தோன்றியிருந்த மனிதர்களுக்கு இந்து வேதத்தையும், இந்து மதத்தையும் கற்பித்தார்கள்.

அப்படி அவர்கள் இந்து வேதத்தையும் இந்து மதத்தையும் கற்பிப்பதற்கு சரியாக ஏற்கெனவே அண்ட பேரண்டமாளும் பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும் உருவாக்கிட்ட இந்து மதத்தின் நிறுவனங்களான கோயில்கள், கோயில் மூலக் கருவறைகள், வெட்ட வெளிக் கருவறைகள், வழிபாட்டு நிலையக் கருவறைகள் எனும் நான்கும் இருந்திட்டன.

இவற்றால்தான், இந்த மண்ணுலகில் தோன்றிட்ட பல்வேறு வகையான இன மக்களும் தங்கள் தங்கள் விருப்பப்படி, தங்கள் தங்களுடைய நாட்டின் இயற்கை நிலைகளுக்கும், இனப் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ற வகையில் புதிய புதிய மொழிகளையும், மதங்களையும் தோற்றுவித்த போதும் கூட, அந்த மொழிகளனைத்தும் தமிழ் மொழியினையே அடிப்படையாகக் கொண்டவைகளாகவும், மதங்களனைத்தும் இந்து மதத்தையே அடிப்படையாகக் கொண்டவைகளாகவும் உருவாகின, உருவாகின உருவாகின.

இந்தப் பேருண்மை காலப்போக்கில் மறக்கப்பட்டு விட்டது, மறக்கப் பட்டு விட்டது, மறக்கப் பட்டு விட்டது. அத்துடன் காலப்போக்கில் உலக மானுட இனங்களுக் கிடையில் போட்டி பொறாமைச் சண்டைச் சச்சரவுகளும், போர் வெறிகளும், ஆதிக்கப் போர்களும் மூண்டு விட்டன.

அப்படி உலக மனித இனங்கள் ஒவ்வொன்றும் மற்றவற்றைப் பகைத்து, எதிர்த்துப் போரிட்டுச் சிதைத்துச் சீரழித்து அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் போர் வெறி முயற்சிகளில் ஈடுபட்டுவிட்ட காரணத்தினால்தான், உலக முழுவதும் உள்ள மொழிகள் அனைத்திற்கும் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழிதான் அடிப்படை என்ற பேருண்மையும் உலக மதங்கள் அனைத்திற்கும் அண்ட பேரண்ட மதமான இந்து மதமே அடிப்படை என்ற பேருண்மையும் கண்மூடித்தனமாக மறுக்கப்பட்டன. மறுக்கப்பட்டன, மறுக்கப்பட்டன, வெறுத்துப் புறக்கணித்து ஒதுக்கப் பட்டன, வெறுத்துப் புறக்கணித்து ஒதுக்கப் பட்டன, வெறுத்துப் புறக்கணித்து ஒதுக்கப் பட்டன.

இப்படியாகத்தான் உலக மானுட இனங்களுக்கிடையில் முளைத்திட்ட போட்டி பொறாமைச் சண்டைச் சச்சரவுகளும், ஆதிக்கப் போர் வெறிகளும் நன்கு கிளைத்துச் செழித்துக் கொழுத்து வெறிகளும் நன்கு கிளத்துச் செழித்துக் கொழுத்து வளரலாயின.

அதன் விளைவாக மனித இனங்களுக்கிடையே நடந்த போட்டி பொறாமைச் சண்டைச் சச்சரவுகளும், ஆதிக்கப் போர் வெறிகளும் மொழிகளுக்கிடையிலும், மதங்களுக் கிடையிலும் முளைத்துக் கிளைத்துச் செழித்துக் கொழுத்து வளர்ந்து விட்டன, வளர்ந்து விட்டன, வளர்ந்து விட்டன.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே