பத்தி 5
அனைத்து வகைப்பட்ட சித்தர்களின் நூல்களிலும் இந்து மறை, இந்து முறை, இந்து நெறி, இந்து சுருதி, இந்து ஆரணம், இந்து ஆகமம், இந்து மீமாம்சை, இந்து நாதம், இந்துசித்தம், இந்து ஒதம், இந்து போதம் என்ற சொற்கள் அரிதாக விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே மிகமிகச் சிலவாகத்தான் காணப் படுகின்றன, இருந்த போதிலும், இந்த இந்து என்ற சொல் பதினெண் சித்தர்களுடைய அனைத்து வகையான அருளுலக கொள்கைகளையும் கோட்பாடுகளையும் குறிக்கோள்களையும் மொத்தமாகக் குறிக்க கூடிய ஒர் உயர் தனிச் செந்தமிழ்ச் சொல்லாகும் என்ற பேருண்மையை இங்குப் பட்டியலிட்டுக் காட்டப் பட்டுள்ள சொற்கள் உணர்த்துகின்றன.