பத்தி 11
இப்பேருண்மையின் அடிப்படையில்தான் பதினெண் சித்தர்கள் தங்களுடைய இந்து வேதமதமான இந்துமதம் பற்றிக் குறிப்பிடும் பொழுதெல்லாம், அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்களுடைய இந்துவேத மதமான இந்து மதம் என்ற சொற்றொடரையே எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.
இதேபோல் பதினெண் சித்தர்கள் தங்களுடைய தாய்மொழியான தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதெல்லாம், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி என்ற சொற்றொடரையே திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்,
அதாவது இந்துவேதமும், இந்து வேத மதமான இந்து மதமும், பதினெண் சித்தர்களுடைய தாய் மொழியான தமிழ் மொழியும் அண்டபேரண்டம் முழுவதும் நன்கு பரவியிருக்கக் கூடியவை என்ற பேருண்மையே மேலே குறிப்பிட்ட வாசகங்களால் தெளிவாக விளங்குகிறது.