Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 20

பத்தி 20

இந்து வேத்தின்  விண்ணியல்  மண்ணியல்  அளவு

மூலப் பதினெண் சித்தர்களுடைய இந்து வேதம் அண்டங்கள், பேரண்டங்கள் அண்டபேரண்டங்கள் முழுவதும் பரவியிருக்கின்ற ஒன்று என்பதனால், இது இந்த மண்ணுலகியலின் இயல்புகளுக்கும், இயக்கங்களுக்கும் விண்ணியலோடு உள்ள தொடர்புகளையெல்லாம் முழுமையாக ஆராய்ந்து தேவையான உண்மைகளையெல்லாம் இந்து மதத்தின் வாழ்வியலாக வார்த்தெடுத்துத் தருகிறது.

அதாவது இந்த இந்து வேதத்தில்தான்

  • இம்மண்ணுலகம் எப்போழுது தோன்றிற்று? எப்படித் தோன்றிற்று?,
  • இம்மண்ணுலகம் எப்பொழுது அழியும், எப்படி அழியும்?,
  • இம்மண்ணுலகில் பயிரினங்களும் உயிரினங்களும், எப்பொழுது தோன்றின, எப்படி அழியும்?,
  • இம்மண்ணுலகோடு தொடர்புடைய விண்மீன்கள் என்னென்ன, இராசிகள் என்னென்ன, கோள்கள் என்னென்ன?,
  • இந்த மண்ணுலகுக்குத் தொடர்பான விண்ணுலகக் கடவுள்களின் வகைகள் என்னென்ன, மண்ணுலகக் கடவுள்களின் வகைகள் என்னென்ன?

முதலிய மிகப் பெரிய பெரிய வினாக்களுக்கெல்லாம் மிகமிகத் தெளிவான நேரடியான வரையறுக்கப்பட்ட பதில்களைப் பெற்றிருக்கிறது.

எனவேதான், இந்து வேதம்

  • ஒரு நொடிப்பொழுது,
  • ஒரு வினாடிப்பொழுது,
  • ஒரு சாமப்பொழுது,
  • ஒரு பகற் பொழுது,
  • ஒர் இரவுப்பொழுது,
  • ஒரு நாட்பொழுது

முதலிய அனைத்தையும் கண் இமை தானாக இமைக்கின்ற நேரத்தை அடிப்படையாகக் கொண்டு மிகமிக நுட்பமாகவும் திட்பமாகவும் வரையறுக்கப்பட்ட அளவுகளைப் பெற்றனவாக உருவாக்கியிருக்கிறது.

இதன் தொடர்ச்சியாகத்தான் ஒவ்வொரு நாளின் பெயர், மாதத்தின் பெயர், ஆண்டின் பெயர், விண்மீன்களின் பெயர், இராசிகளின் பெயர், கோள்களின் பெயர், ஒரு நாளின் ஆறுகாலப் பெயர், எட்டு யோக நிலைப் பெயர், ஆண்டின் ஆறு பருவங்களின் பெயர் முதலியவைகள் அனைத்தும் மிகமிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வரையறுத்து வழங்கப் பட்டிருக்கின்றன இந்து வேதத்தால்.

இவையனைத்தையும் அண்டபேரண்டம் முழுவதையும் ஆளும் அனைத்து வகைப்பட்ட பதினெண் சித்தர்கள், பதினெட்டாம்படிக் கருப்புகள், சித்தர்கள், வழிபடு நிலையினர்கள், கடவுள்கள், தேவியர்கள், தேவதைகள், தேவர்கள், கணங்கள், இருடிகள், முனிவர்கள் முதலியோர் கணக்கற்ற கோடி கோடி ஆண்டுகளாக ஆராய்ந்தறிந்தே உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பகுத்தறிவுப் பூர்வமான பயன்மிக்க ஆராய்ச்சி முடிவுகளை உடைய ஒரே ஒரு வேதம் இந்து வேதம்தான்.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே