பத்தி 31
இந்து வேதம் தன்னுடைய நான்கு வகைப்பட்ட வேத நூல்களின் எண்ணிக்கைகளின் கூட்டுத் தொகையான முன்னூற்றுத் தொன்னூற்றாறு (396) என்ற எண்ணிக்கையோடு இந்து வேதத்திற்குரிய மூன்று வகைப்பட்ட சக்கரங்களின் எண்ணிக்கைகளான நூற்றெட்டு (108), இருநூற்றி நாற்பத்து மூன்று (243), ஆயிரத்தெட்டு என்ற எண்ணிக்கைகளையும்; இம்மூன்றின் கூட்டுத் தொகையான ஆயிரத்து முன்னூற்றி ஐம்பத்தொன்பது (1359) என்ற எண்ணிக்கையையும் சேர்த்து ஆக மொத்தம் ஐந்து எண்ணிக்கைளை, அதாவது எண்களை; இந்து வேதத்தின் புனிதமானவைகளாக, கடவுட் தன்மை உடையவைகளாக, தெய்வீக ஆற்றல் உடையவைகளாக, அருட்பாதுகாப்பு வழங்கக் கூடியவைகளாக அறிவிக்கிறது, அறிவிக்கிறது, அறிவிக்கிறது.
எனவேதான், இநத ஐந்து எண்ணிக்கைகளே 'நமசிவாய', 'பராசத்தி', 'சிவாயநம' எனும் ஐந்தெழுத்துப் பூசைமொழி வாசகங்களுக்கு உரியனவாக அறிவிக்கிறது இந்து வேதம்.
இருந்த போதிலும், இந்த மூன்று பூசைமொழிகளில் ஒவ்வொரு பூசை மொழியை எழுதும் பொழுதும் எந்தெநத எழுத்துக்கு எந்தெந்த எண்ணிக்கையை உரியதாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பேருண்மை பதினெண் சித்தர்களுக்கும், பதினெண் சித்தர் பீடாதிபதிகளுக்கும் மட்டுமே தெரிந்திருக்கக் கூடியவைகளாக மறைத்துப் பாரம்பரியமாகப் பாதுகாக்கப் பட வேண்டும் என்று அறிவிக்கிறது இந்து வேதம்.
ஏனென்றால், இப் பேருண்மைகள் அளப்பரிய பேராற்றல்களை அருளுலகில் தோற்றுவிக்கக் கூடியவை. இவற்றால்தான் கருவறை, வெட்டவெளிக் கருவறை, வழிபாட்டு நிலையக் கருவறை, கோயில்களின் மூலக் கருவறை எனும் நான்கு வகைப்பட்ட கருவறைகளும் உயிர்ப்புச் செய்யப் படுவதும், புத்துயிர்ப்புச் செய்யப் படுவதும் நிகழ்த்தப் பட முடியும்.
எனவேதான், இந்து மதம் ஒன்றின் மூலம்தான் அருவங்களை வழிபடல், அருவுருவங்களை வழிபடல், உருவ அருவங்களை வழிபடல், உருவங்களை வழிபடல் எனும் நான்கு வகையான வழிபாட்டு முறைகளும், நெறிகளும் சிறப்பாக செயல் படுத்தப் படுகின்றன.
“அதாவது, கடவுள்களாலேயே எழுதித் தரப்படுகின்ற இந்து வேதம் ஒன்றில்தான் அல்லது ஒன்றின் மூலம்தான் அருவங்களையும், அருவுருவங்களையும், உருவ அருவங்களையும், உருவங்களையும் வழிபட்டுப் பத்தி, சத்தி, சித்தி, முத்தி எனும் நான்கினையும் பெறுவதற்குரிய முறைகளும், நெறிகளும் இருக்கின்றன, இருக்கின்றன, இருக்கின்றன.
இன்னும் சொல்லப் போனால், இந்துவேதம் தவிர வேறு எந்த ஒரு வேதத்தாலும் கல், மண், மணல் முதல் அனைத்து வகையான பயிரினங்கள், உயிரினங்கள் முடிய உள்ள அனைத்தையும் கடவுள்களாக்கி வழிபட்டுப் பயனடையும் முறையும் நெறியும் அறிவிக்கப் படவில்லை, அறிவிக்கப் படவில்லை, அறிவிக்கப் படவில்லை.
இம் மாபெரும் பேருண்மையை அடிப்படையாகக் கொண்டுதான்
- "இந்து வேதமே முழுமையான வேதம்",
- “இந்து வேதமே முறையான வேதம்",
- "இந்து வேதமே நெறியான வேதம்",
- "இந்து வேதமே நிறைவான வேதம்"
என்ற வாசகங்கள் இந்து வேதத்தின் எல்லா நூல்களிலும் தவறாமல் குறிக்கப் படுகின்றன.
இன்னும் சொல்லப் போனால், இந்து வேத நாயகமாக, இந்து வேத பீடமாக, இந்துமதத் தந்தையாக, இந்துமதத் தலைமை ஆச்சாரிய மடமாக, இந்து மதத்தின் முழுமுதற் தலைமைக் குருபீடமான பதினெண் சித்தர் பீடமாக, ஞானாச்சாரியாராக விளங்கிடும் குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் கருவூறார் அவர்கள் எழுதுகின்ற குருபாரம்பரியம், இலக்கிய பாரம்பரியம், அரச பாரம்பரியம்
எனும் முப்பெரும் தொடர் நூல்களில் இந்து மதம் பற்றிய இவ்வாசகங்கள் பல இடங்களில் குறிக்கப்படுவதே மரபாகும்.
இவை போன்ற எண்ணற்ற வாசகங்களை, இந்து வேதம் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் அமராவதியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும்; பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதியான குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களும் இந்து வேதம் பற்றி எழுதும் குறிப்பேட்டை நிறைவு செய்கிறார்கள்.
இவர்கள் இருவர்தான், கலியுகத்தில் தோன்றியவர்கள். முதல் யுகம் முடிந்து இரண்டாவது யுகம் ஆரம்பித்த போது தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகளும், இரண்டாவது யுகம் முடிந்து மூன்றாவது யுகம் ஆரம்பித்தபோது தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகளும், மூன்றாவது யுகம் முடிந்து இந்த நான்காவது யுகம் ஆரம்பித்தபோது தோன்றிய இரண்டு பீடாதிபதிகளும் இந்து வேதம் பற்றிய இந்தக் குறிப்பேடுகளை விட மிகமிகப் பெரிய அளவில் நன்கு விரிவாகவே இந்து வேதக் குறிப்பேடுகளை எழுதியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் விரிவாக இந்து வேதத்தையும் இந்து மதத்தையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது இப்பீடாதிபதிகளின் முடிவு. இவர்கள் இருவர்களின் முடிவுகளை அப்படியே ஏற்றுத்தான் இன்றுள்ள இந்து வேத நாயகம், இந்து வேத பீடம், இந்து மதத் தந்தை, இந்து மதத் தலைமை ஆச்சாரிய மடம், இந்து மதத்தின் முழுமுதற் தலைமைக் குருபீடமான பதினெண் சித்தர் பீடம், ஞானச்சாரியார் குருமகா சன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் அப்படியே முழுமையாக ஏற்றுச் செயல்படுத்துகிறார்.