Sitemap   அச்சிடற்கு ஏற்றது  

ஆரம்பப் பக்கம் > இந்து வேதம் > பத்தி 26

பத்தி 26

இப்படி இனச் சண்டை சச்சரவுப் போர் வெறிகள் மொழிகளுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் முளைத்துச் செழித்துக் கொழுத்து வளர்ந்து விட்ட காரணத்தினால்தான்;

தனி மனிதர்களுடைய உணர்வுகளையும், எண்ணங்களையும் அடுத்தவர்களுக்குப் பரிமாறி ஒருவருக்கொருவர் நட்பையும், தோழமையையும் வளர்க்கப் பயன்பட்டிடும் மொழி, தனி மனிதர்களுக்கிடையில் வேற்றுமைகளையும், பகைகளையும், தேவையில்லாத கசப்புணர்வுகளையும் வளர்க்கக் கூடிய ஒன்றாகி விட்டது.

இதைப் போலவே ஒர் இனமக்கள் அல்லது ஒரு நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக சமுதாயம் எனும் கட்டுக் கோப்பைப் பெற்று ஒற்றுமையுடனும், பற்றுடனும், பாசத்துடனும், சமத்துவத்துடனும், சமாதானத்துடனும் வாழ்வதற்குப் பயன்பட வேண்டிய மதம் குடும்பங்களுக்கிடையில் வேற்றுமைகளையும், பகைகளையும், தேவையில்லாத கசப்புணர்வுகளையும் வளர்க்கக் கூடிய ஒன்றாகி விட்டது.

எனவேதான், இம்மண்ணுலகில் மானுட இனங்களுக்கிடையில் நல்ல ஒற்றுமையும், பற்றும், பாசமும், சமாதானமும், சமத்துவமும், உருவாக்கப்பட வேண்டுமேயானால்; மொழிகளுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் முளைத்துக் கிளைத்துச் செழித்து வளர்ந்திருக்கின்ற போட்டி பொறாமை வெறுப்புணர்வுகள், மறுப்புணர்வுகள், எதிர்ப்புணர்வுகள், பகையுணர்வுகள், ஆதிக்கப் போர் வெறியுணர்வுகள் முதலியவை அனைத்தும் வேருடன் களையெடுக்கப்பட வேண்டும், களையெடுக்கப்பட வேண்டும், களையெடுக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டது.

அந்தக் களையெடுக்கும் பணியை யாரும் புண்பட்டு விடாமல், அதிக அளவு பாதிக்கப் பட்டு விடாமல் அமைதியான கருத்து மாற்றப் புரட்சிகளின் மூலம், தத்துவப் புரட்சிகளின் மூலம், செயல் சித்தாத்தப் புரட்சிகளின் மூலம், செய்திட வேண்டும், செய்திட வேண்டும், செய்திட வேண்டும்.

இப்படிப்பட்ட கருத்து வளமும், கொள்கை வளமும், குறிக்கோள் வளமும் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்துவேதத்திற்குத்தான் உண்டு, உண்டு, உண்டு.

மேலும், இந்த இந்து வேதத்தின் செயல் வடிவமான இந்து மதத்திடம் மேற்படி மொழி மத வேற்றுமைகளையும், வெறிகளையும், போட்டி பொறாமைச் சண்டைச் சச்சரவுகளையும், போர்களையும் நளினமாக முழு அளவில் தடுத்து அகற்றுவதற்குரிய செயல் நிலைகளும், சட்ட திட்டங்களும், நடை முறைகளும், ஒழுகலாறுகளும் ஏராளமாக இருக்கின்றன, ஏராளமாக இருக்கின்றன, ஏராளமாக இருக்கின்றன.

எனவேதான் இந்து வேதமும், இந்துவேத மதமான இந்து மதமும் மொழியைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் கடவுள்களைப் பற்றியும், அருளுலகைப் பற்றியும், பொருளுலைப் பற்றியும், அருளுலகப் பொருளுலகத் தொடர்புகள் பற்றியும் கூறுகின்ற பேருண்மைகளை இந்த உலகிலுள்ள எல்லா இனத்தவர்களும், மொழியினர்களும், மதத்தவர்களும், நாட்டவர்களும் நன்கு தெரிந்து புரிந்து கொள்ளும்படி எடுத்துக் கூறும் பணி துவக்கப் படுகிறது.

இப்பணியே இந்து வேத பாடசாலைகளாகவும் இந்து வேத முழக்கக் கூட்டங்களாகவும், இந்து மறுமலர்ச்சி இயக்கமாகவும், இந்து மத வளவளர்ச்சித் திருச்சபையாகவும் பல்வேறு வடிவங்களைப் பெற்றிருக்கின்றன.

மதம் என்பதின் பொருள்

மதம்: - அண்டபேரண்டம் ஆளும் மூலப்பதினெண்சித்தர்கள் மதம் என்ற சொல்லுக்கு தமிழ், அமிழ்து, உயிர், முழுமையானது, நிறைவானது, நிம்மதியானது, அன்பானது, அடக்கமானது, அமைதியானது, அழகானது, பயன்மிக்கது, சுவைமிக்கது, ஒப்புயர்வற்ற நல்ல வழி, நல்ல வழிகாட்டி, நல்ல வழித்துணை, அரிய வழிப்பயன், பண்பட்ட ஒழுகலாறு, முழுமையான தத்துவம், ...  என்று எண்ணற்ற சொற்களாலும், சொற்றொடர்களாலும் பொருள் கூறுகிறார்கள்.

வேதம் என்பதின் பொருள்

வேதம் என்றால் வேதிக்கப்பட்டது, சமைக்கப்பட்டது, பக்குவப்படுத்தப் பட்டது, பதப்படுத்தப் பட்டது, பண்படுத்தப்பட்டது, முழுமையான வளர்ச்சியைப் பெற்றது, தேவையான முதிர்ச்சியைப் பெற்றது, சுவைமிக்கது, பயன்மிக்கது, இன்றியமையாதது, சிறந்த துணையாக இருப்பது, ... என்று பல பொருள்கள் உண்டு.

 

இந்து என்பதின் பொருள்

இந்து என்ற சொல்லுக்கு விந்து, உயிரணு, உயிர், உயிரின் கரு, திங்கள் (நிலவு, சந்திரன்) அன்பு, அழகு, அருள், அடக்கம், அமைதி, அமுதம், அரிது, அறிவு, அளப்பரியது, அடைதற்கரியது, அடைக்கலம், அந்தம், அண்டம், அண்டபேரண்டம், அருவம், அருவுருவம். . .; ஆற்றல், ஆர்வம், ஆக்கம், ஆதரவு, ஆதவன், ஆவி, ஆன்மா, ஆருயிர், ஆண்டவன், ஆகமம், ஆரணம் . ..; இறை, இன்பம், இயற்கை, இசைவு, இயக்கம். . .; ஈவு, ஈர்ப்பு, ஈசன், ஈதல் . . . ; ...; என்று விரிவஞ்சி தமிழிலுள்ள முதன்மையான எழுத்துக்கள் ஆரம்பமாகக் கொண்ட சிலசில சொற்கள் மட்டும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

மேலே