பத்தி 15
இப்படி இந்துவேதம் பதினாறு வகைப்பட்ட செல்வங்களைப் பெற்றிருப்பதைத் தான் கல்வி கற்கின்ற இளைஞர்களை வாழ்த்தும் பொழுது, 'பதினாறும் கற்று பெருவாழ்வு வாழ்ந்திடு' என்று வாழ்த்தும் மரபு தோன்றிற்று.
இதைப் போலவே திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்வைத் துவக்குகின்ற மணமக்களை வாழ்த்தும் போது, இந்து மதம் பதினாறு வகைப்பட்ட செல்வங்களைப் பெற்றிருப்பதை நினைவில் கொண்டுதான் 'பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்ந்திடு' என்று வாழ்த்தும் மரபு தோன்றிற்று.
இப்படிக் கொள்கை வடிவில் இருக்கின்ற இந்து வேதத்தின் செல்வங்களும், செயல் வடிவில் இருக்கின்ற இந்துமதத்தின் செல்வங்களும்; அன்றாட வாழ்வியலின் நடை முறைகளில் அடிக்கடி பசுமையான, நினைவில் நிற்கின்ற அளவிற்கு இந்து வேதமும் இந்து வேத மதமான இந்து மதமும் நாடு முழுவதும் நன்கு விழிச்சியும், எழிச்சியும், மலர்ச்சியும், செழிச்சியும் உடைய வளர்ச்சி நிலையினைப் பெற்றிருந்திருக்கின்றன, பெற்றிருந்திருக்கின்றன, பெற்றிருந்திருக்கின்றன.
ஆனால் இன்றுள்ள
- இந்து மதத்தின் பாமர மக்களுக்கும்;
- பத்தி, சத்தி, சித்தி, முத்தி நிலைகளைப் பெற்ற மத வாழ்வினர்களுக்கும்;
- மதத்தின் தலைவர்களான ஆச்சாரியார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், தம்பிரான்கள், பண்டார சந்நதிகள், பண்டார சந்நிதிகள், சன்னிதானங்கள், ஆதீனங்கள், குருபீடங்கள் எனும் ஒன்பது பேர்களுக்கும்;
ஏறத்தாழ பதினெண் சித்தர்களுடைய சித்தர் நெறியெனும் சீவ நெறியின் பெயரான இந்து எனும் சொல்லும், இந்துவேதம், இந்துவேத மதம், இந்துவேத மதமான இந்து மதம் எனும் சொற்களும் அல்லது சொற்றொடர்களும் தெரியாதவைகளாக இருக்கின்றன, தெரியாதவைகளாக இருக்கின்றன, தெரியாதவைகளாக இருக்கின்றன, புரியாதவைகளாக இருக்கின்றன, புரியாதவைகளாக இருக்கின்றன, புரியாதவைகளாக இருக்கின்றன.
எனவே தான், இன்றைக்கு இந்து மதத்தை விரும்புகிறவர்களும், நம்புகிறவர்களும் ஏறத்தாழ நூற்றுக்கு எத்தனை பேர் என்று விரல் விட்டு எண்ணி விழுக்காட்டுக் கணக்குப் போடும் நிலையே இருக்கிறது.
இந்த நிலையை எண்ணிக் கவலையுற்றுத்தான்
- 'இந்து',
- 'வேதம்',
- 'இந்து வேதம்',
- 'இந்துவேத மதமான இந்து மதம்',
- 'இந்து மத மக்களான இந்துக்கள்',
- 'இந்து மத நம்பிக்கைகள்',
- 'இந்து மதக் கோட்பாடுகள்',
- 'இந்து மதக் குறிக்கோள்கள்',
- 'இந்து மதக் கோட்பாடுகள்',
- 'இந்து மதச் சம்பிறதாயங்கள்',
- 'இந்து மதத் திருநாள்கள்',
- 'இந்து மதத் திருவிழாக்கள்',
- 'இந்து மதக் கோயில்கள்',
- 'இந்து மதக் கடவுள்கள்',
- 'இந்து மதத் தலைவர்கள்',
- 'இந்து மதக் கலைஞர்கள்',
- 'இந்து மத அருளாளர்கள்',
- 'இந்து மத இலக்கியங்கள்',
- 'இந்து மத வரலாறுகள்'
முதலிய சொற்களுக்கு விளக்கங்களும்; இச்சொற்கள் குறிக்கின்ற பொருள்களுக்கு விளக்கங்களும் வழங்கப்படும் பணி இன்றுள்ள பதினெண் சித்தர் மடத்தால் துவக்கப் பட்டிருக்கிறது, துவக்கப் படடிருக்கிறது, துவக்கப் பட்டிருக்கிறது.