பத்தி 24
இந்துவேதம் இந்த உலகத்தை நான்கு வகைப்பட்ட நிலங்களாகப் பகுத்து நானிலம் என்று பெயரிட்டாலும்; மானுட வாழ்வியலைப் பொருளுலக வாழ்வியலாகவும், அருளுலக வாழ்வியலாகவும் பகுக்கும் பொழுது இந்த உலகை ஐந்து வகைப்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு வந்து விட்டது.
எனவேதான்,
- மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி,
- காடும் காடு சார்ந்த இடம் முல்லை,
- வயலும் வயல் சார்ந்த இடம் மருதம்,
- கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்,
- முல்லையும் குறிஞ்சியும் எதிர்பாராமல் இயற்கையின் சீற்றத்தால் வளம் குன்றி திரிந்தால் பாலை
என்று ஐந்து வகைப்பட்ட நிலங்களாகப் பகுத்து இந்த ஐந்து வகைப்பட்ட நிலப்பகுப்புக்களே இந்து வேதத்தின் செயல்வடிவான இந்து மதத்திற்கு உரியவைகளாக அறிவிக்கப் பட்டு விட்டன.
அதாவது இந்து வேதத்தின்படி இந்த நிலம் நான்கு வகைப் பிரிவுகள் உடைய நானிலமாகும், ஆனால் இந்து மதப்படி இந்த உலகம் ஐந்து வகை நிலப்பரப்புக்களை உடைய ஐநிலமாகும்.
இந்த ஐந்நில மக்களின் வாழ்வே ஐந்திணை வாழ்வாகும்.
இந்த ஐந்திணை வாழ்வின் அருளுலக இணைப்பே "ந,ம,சி,வா,ய = நமசிவாய, ப,ரா,ச,த்,தி = பராசத்தி, சி,வா,ய,ந,ம = சிவாயநம" என்ற ஐந்தெழுத்துப் பூசை மொழியாயின.
இவற்றின் விரிவுகளும், பிரிவுகளுமாகத்தான்
- எல்லா வகையான அருளுலக மந்தரம், மந்திரம், மந்திறம், மாந்தரம், மாந்தரீகம் என்ற ஐந்தும் அருளுலகக் கடவுள்கள் அனைவரையும் அன்றாடப் பூசையில் போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்திடவும்;
- தந்தரம், தந்திரம், தந்திறம், தாந்தரம், தாந்தரீகம் எனும் ஐந்தும் அருளுலகிலுள்ள அனைத்து வகைப்பட்ட கடவுள்களை உருவாக்கு வதற்கும், அதாவது தோற்றுவிப்பதற்கும்;
- எந்தரம், எந்திரம், எந்திறம், ஏந்தரம், ஏந்தரீகம் எனும் ஐந்தும் அருளுலகிலுள்ள அனைத்து வகைப்பட்ட கடவுள்களையும் மற்ற அனைத்து வகைப்பட்டவர்களையும் இயக்குவதற்கும்
என்று உருவாக்கப்பட்டன.
இவையே இந்து வேதத்தின் செயல் வடிவான இந்து மதத்தின் அமைப்புகளாகும்.