பத்தி 12
இந்த, இந்து வேதம் பெரும்பாலும் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய தெளிவான, எளிமையான, விளக்கமான அழகிய, குறுகிய, நெடிய சொற்றொடர்களைக் கலந்து கலந்து எழுதப் பட்டதாகும். இதனால் அதிக மொழியறிவு இல்லாதவர்கள் கூட இந்து வேதத்தின் வாசகங்களைப் படித்துப் பொருள் கொள்ள முடிகிறது.
இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த வேதத்தின் எல்லா நூல்களுமே பெரும்பாலும் உரைநடையில்தான் எழுதப் பட்டிருக்கின்றன். அதாவது, வேதம் என்பது எல்லா வகைப்பட்ட மக்களாலும் எளிதில் படித்துப் பொருள் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கருத்தோட்டத்தில்தான் இந்து வேதம் எழுதப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் பதினெண்சித்தர்கள் தங்களுடைய இந்து வேதத்தை மானுட இன மேம்பாட்டுக்காகவேதான் தோற்றுவித்தார்கள் என்ற பேருண்மை விளங்குகிறது.