பத்தி 13
இந்து வேதம் என்று குறிக்கப்படுவது சிறப்பாகப்
- பூசை மொழிகள்,
- பூசைவிதிகள்,
- தத்துவங்கள்,
- செயல் சித்தாந்தங்கள்
என்ற நான்கு பெரும் பிரிவுகளை உடையதாகும்,
அதாவது பதினெண்சித்தர்களுடைய இந்து மதத்தில் இந்த நான்கு, நான்கின் மடங்குகளான எட்டு, பன்னிரண்டு, பதினாறு, முப்பத்திரண்டு, முப்பத்தாறு, நாற்பத்தெட்டு, அறுபத்தினான்கு தொண்ணூற்றாறு, நூற்றெட்டு, நூற்றி நாற்பத்தினான்கு, ஆயிரத்தெட்டு என்ற எண்ணிக்கைகளும்;
ஐந்து, ஆறு, எழு, ஒன்பது, ஒன்பதின் மடங்குகளான பதினெட்டு, இருபத்தேழு, முப்பத்தாறு, ஐம்பத்தினான்கு, அறுபத்து மூன்று, எழுபத்திரண்டு, எண்பத்தொன்று, இருநூற்றி நாற்பத்து மூன்று, எழுநூற்றிருபத்தொன்பது, இரண்டாயிரத்து நூற்றியெண்பத்தேழு என்ற எண்ணிக்கைகளும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப் படுகின்றன.