• முகப்புப் பக்கம்>
  • சூலகங்கள்>
  • இருக்குவேதம்>
  • இருக்கு வேதம்-15:29:21
  • இருக்கு வேதம்-15:29:21

    15:29:21

    இருக்கு வேதத்தில் காண்டம்-15, மண்டலம்-29, நாள் உரைக்கோவை வாசக நாள் மலர்-21

    “ஞானம், அகஞானம், புறஞானம், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் என்ற ஐந்து வகைப் பட்ட அறிவியல் கலைகள் இருக்கின்றன. இவற்றில் நான்காவது அறிவியல் கலையான விஞ்ஞானம் என்பதை மட்டும் அதிக அளவில் வளர்க்கக் கூடாது. ஏனெனில், இந்த விஞ்ஞானம் ஆக்கச் சத்திகளை, ஆக்கப் பூர்வமான கொள்கைகளை, தத்துவங்களை வெளியிட்ட போதும் இந்த விஞ்ஞானத்தில் எல்லா வகைப்பட்ட போதனைகளிலும், சாதனைகளிலும், அழிவை பேரழிவை விளைவிக்கக் கூடிய கருத்துக்களும், கருவிகளும், சாதனங்களும், நூதன இயந்திரங்களும் உருவாக்கப் படுமே தவிர மனிதனுக்கு ஆக்கத்தையோ, நிறைவையோ, நிம்மதியையோ, அமைதியையோ, பொறுமையையோ, போதுமென்ற நிறை உணர்வையோ, அடுத்தவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனிதப் பண்பையோ, எல்லோரும் ஒன்று கூடி வாழ வேண்டும் என்ற எண்ணத்தையோ, ஒருவருக்கொருவர் உதவி செய்து தோழமையையும் நட்பையும் வளர்க்கும் போக்கையோ வளர்க்காது! வளர்க்காது! வளர்க்காது! வளர்க்கவே வளர்க்காது! அதனால் விஞ்ஞானக் கலையை மட்டும் அதிக அளவுக்கு வளர்க்கக் கூடாது. இன்னும் சொல்லப் போனால், விஞ்ஞானிகள் மானுட அழிவுக்கு வழி வகுப்பவர்களாகவே இருக்கிறார்கள், இருப்பார்கள். மேலும் விஞ்ஞானிகளின் சாதனைகள், போதனைகள் கூடுமானவரை பிறரைச் சுரண்ட, பிறரை அடிமைப்படுத்த, பிறருடைய சொத்துக்களை ஆக்கிரமிப்புச் செய்யக் கற்றுக் கொடுப்பவைகளாகத்தான் இருக்கின்றன! இருக்கின்றன! இருக்கின்றன! இருக்க முடியும்! இருக்க முடியும்! இருக்க முடியும்!


    தொடர்புடையவை: