இந்து வேதம் (ஒரு சுருக்க விளக்கம்) பத்தி 1 இந்து வேதம் என்ற பொருளாழம் மிக்க ஒர் அழகிய இனிய செந்தமிழ்ச் சொல், இம்மண்ணுலகில் இந்து என்ற சொல்லுக்கு ஆரம்ப காலத்திலேயே 48 முதல் 108 சொற்களில் நேரடியான பொருள் விளக்கம் தரப் பட்டிருக்கின்றது. கடந்த நான்கு யுகங்களில், இந்த இந்து என்ற ஒரே சொல்லுக்கு நேரடிப் பொருள் கூறும் சொற்களாக ஆயிரக்கணக்கான சொற்கள் தோற்றுவிக்கப் பட்டிருக்கின்றன அல்லது அறிவிக்கப் பட்டிருக்கின்றன.
பத்தி 2 இந்த இந்து வேதம் இந்த மண்ணுலகம் தோன்றுவதற்கு முன்னரே கணக்கற்ற கோடிகோடி ஆண்டுகளாக அண்டங்கள் பேரண்டங்கள் அண்ட பேரண்டங்கள் எனும் அனைத்திலும் நன்கு பரவி, வேரூன்றி வளர்த்து வளப்பட்டு வலிமைப்பட்டு பொலிவு பெற்ற ஒன்றாகும்.
பத்தி 3 இந்த இந்து வேதம் அண்ட பேரண்டங்களை ஆளுகின்ற மூலப் பதினெண் சித்தர்கள், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புகள், 48 வகைப்பட்ட கடவுள்கள், 48 வகை வழிபடு நிலையினர்கள், 48 வகைச் சித்தர்கள் முதலியவர்களால் காலங்கள் தோறும் ஏற்படக் கூடிய புதிய புதிய தேவைகளுக்கேற்பத் தேவையான மாற்றங்களை யெல்லாம் செய்யப் பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.
மேலும் படிக்க...
பத்தி 4 இந்து என்ற சொல் தருகின்ற செய்திகள், வேதம் என்ற சொல்லால் மட்டுமே சிறப்பாகக் குறிக்கப்படுவதுதான் மரபாக இருக்கிறது. இந்த உண்மையை, விளக்கிட,
இந்துவேத மதமான இந்துமதம் இந்துமதத்தின் இந்துவேதம் அண்ட பேரண்டமாளும் இந்துவேதம் அண்டபேரண்ட அருளுலக ஆட்சி மொழயான அருளூறு தெய்வீகச் செந்தமிழ் நிலையாக என்றென்றும் வாழும் இந்துவேதம், அருளுலகைப் பற்றி மெய்யான செய்திகளைத் தருகின்ற இந்து வேதம். கடவுள்களாலேயே காலங்கள் தோறும் மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படும் இந்து வேதம். மனிதன் கடவுளைச் சந்தித்திட வழியாக வழிகாட்டியாக வழித்துணையாக இருக்கின்ற இந்து வேதம். மனிதர்களுக்குத் தேவையான போது கடவுளர்களே நேரில் வந்து உதவி செய்திடச் செய்யும் வேதம் இந்து வேதம். மனிதர்கள் கடவுளாகிடுவதற்கு உதவும் இந்து வேதம், கடவுளர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள், பிறப்பிறப்பற்ற பெருநிலை பெறுகிறார்கள் எனும் முப்பெரும் அருளுலக உண்மைகளை தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கிக் கூறும் இந்து வேதம். கடவுள்களில் மண்ணுலகக் கடவுள்கள்; மண்ணுலகு கடந்த எழுலகக் கடவுள்கள் (விண்ணுலகக் கடவுள்கள்) என்று கடவுள்களில் இருபெரும் வகையினர்கள் இருக்கின்றார்கள் என்ற பேருண்மையை விளக்குகின்ற இந்து வேதம்.
மேலும் படிக்க...
பத்தி 5 அனைத்து வகைப்பட்ட சித்தர்களின் நூல்களிலும் இந்து மறை, இந்து முறை, இந்து நெறி, இந்து சுருதி, இந்து ஆரணம், இந்து ஆகமம், இந்து மீமாம்சை, இந்து நாதம், இந்துசித்தம், இந்து ஒதம், இந்து போதம் என்ற சொற்கள் அரிதாக விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே மிகமிகச் சிலவாகத்தான் காணப் படுகின்றன.
இருந்த போதிலும், இந்த இந்து என்ற சொல் பதினெண் சித்தர்களுடைய அனைத்து வகையான அருளுலக கொள்கைகளையும் கோட்பாடுகளையும் குறிக்கோள்களையும் மொத்தமாகக் குறிக்கக் கூடிய ஒர் உயர் தனிச் செந்தமிழ்ச் சொல்லாகும் என்ற பேருண்மையை இங்குப் பட்டியலிட்டுக் காட்டப் பட்டுள்ள சொற்கள் உணர்த்துகின்றன.
மேலும் படிக்க...
பத்தி 6 வேதம் என்ற சொல், வேதித்தல் அதாவது சமைத்தல், சமைத்துப் பதப் படுத்தப்பட்ட ஒன்று, அல்லது சமைத்துப் பக்குவப் படுத்தப்பட்ட ஒன்று என்ற பொருளைத் தருவதாகும்.
பதினெண் சித்தர்களின் அருளுலகப் படைப்புக்களில் நான்மறை, நான்முறை, நானெறி, நான்வேதம் எனும் பதினாறும் மிகமிக அடிப்படையான இலக்கியங்களாக இருக்கின்றன.
இருந்தாலும் நான் மறை என்ற நான்கு இலக்கியங்களும் குறிப்பிட்டவர் அன்றி மற்றவர் அறியா வண்ணம் மறைத்துக் காக்கப்பட வேண்டியவையாகவே அறிவிக்கப் பட்டிருகின்றன.
நானெறி என்பவை குரு, குருக்கல், குருமார், பூசாரி எனப்படும் நால்வரும் மற்றபடி தவம், ஞானம் முதியவைகளைச் செய்யக் கூடிய அருளாளரும் எப்படியெப்படி வாழ வேண்டும் என்ற ஒழுகலாறுகளை, வாழ்வியல்களை, சட்டதிட்டக் கட்டுப்பாடுகளை விளக்குவனவாகும்.
நான்முறை என்பவை பதினெண் சித்தர்களுடைய அருளுலகச் செயல்பாட்டு விதிகள், அவற்றின் விளக்கங்கள், அவற்றின் பயன்கள், அவை சார்ந்த அருளுலகப் பொருளுலக நடைமுறைகள் முதலியவைகளையே விளக்குவனவாகும்.
நான்வேதம் என்பதில் இருடி வேதம், அசுரவேதம், யாம வேதம் அல்லது சாம வேதம், அதர்வான வேதம் என்ற நான்கு பகுப்புக்கள் இருக்கின்றன,
மேலும் படிக்க...
பத்தி 7 இந்து மத வரலாறு, இம்மண்ணுலகில் இந்து மதம் தோற்றுவிக்கப்பட்ட இடம், காலம், இந்து மதத்தின் அடிப்படையான உயிர்நாடியான இந்து வேதம், இந்து வேதத்தின் 108 பூசை மொழி நூல்கள், இந்து வேத்தின் 48 பூசை விதி நூல்கள், இந்து வேதத்தின் 96 தத்துவ நூல்கள், இந்து வேத்தின் 144 செயல் சித்தாந்த நூல்கள், இந்து வேத அருளாளர்கள், இந்து வேதக் கடவுள்கள், இந்து வேதக் கோயில்கள், இந்து வேதக் கருவறைகள், இந்து வேதக் கலைகள் முதலியவை அனைத்தும் அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியில்தான் இருக்கின்றன என்ற பேருண்மையும்;
தமிழர்கள்தான் அருளுலகின் மூலவர்கள், காவலர்கள், தத்துவ வித்துக்கள், செயல் சித்தாந்த நாற்றுக்கள் என்ற பேருண்மையும் குறைக்கப்பட்டு மறைக்கப் படலாம், குறைக்கப்பட்டு மறைக்கப் படலாம், குறைக்கப்பட்டு மறைக்கப் படலாம்.
அதனால், அனாதி காலத்து மதமான இந்துமதம் அனாதையாக்கப் பட்டு விடலாம், அனாதையாக்கப் பட்டு விடலாம், அனாதை யாக்கப்பட்டு விடலாம் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான், பதினெண் சித்தர்கள் இந்து வேதத்தை என்றென்றைக்கும் தலைமை தாங்கிக் காத்து வழி நடத்தும் பொறுப்பினைப் பதினெண் சித்தர் மடத்திடம் ஒப்படைத்தார்கள், ஒப்படைத்தார்கள், ஒப்படைத்தார்கள்.
மேலும் படிக்க...
பத்தி 8 பதினெண் சித்தர்கள், இம்மண்ணுலக முடிவுக்குள் ஏற்படக் கூடிய நான்கு யுகங்களிலும் வாழையடி வாழையென வரக் கூடிய பதினெண் சித்தர்களின் மரபில் மட்டுமே பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிப் பதினெண் சித்தர் மடத்தைத் தங்களுடைய வசதி வாய்ப்புக்களுக்கு ஏற்பத் தமிழகத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் உருவாக்கி இந்து மறுமலர்ச்சிக்காக, இந்து வேத வளவளர்ச்சிக்காக, இந்து மத ஆட்சி மீட்சிக்காக, இந்துக்களின் விழிச்சிக்காக, எழிச்சிக்காக, செழிச்சிக்காக எல்லாவகையான செயல்களையும் மேற்கொண்டிடுமாறு திட்டம் செய்து சென்றிருக்கிறார்கள்.
இதில் மாற்று வேதங்களையோ அல்லது மாற்று மதங்களையோ அல்லது வேற்று மத மக்களையோ நகைத்தோ, எதிர்த்தோ, பகைத்தோ, இழித்தோ, அழித்தோ, பழித்தோ எந்தவித கருத்தோ, உணர்வோட்டமோ ஊசி முனையளவு கூட இல்லை, ஊசி முனையளவு கூட இல்லை, ஊசி முனையளவு கூட இல்லை, ஊசி முளையளவு கூட இல்லவே இல்லை என்பதே குறிப்பிடத்தக்கது.
இதுவே, பதினெண் சித்தர்களுடைய, அருளுலகப் போதனைகளுடைய மேம்பாடுகளையும், சாதனைகளுடைய செம்மை நிலைகளையும் வெளிப்படுத்தும்.
மேலும் படிக்க...
பத்தி 9 இந்துவேதம் கணக்கற்ற தனித்தனிப் பிரிவுகளை உடையாதாகும். அதாவது அருளுலகப் பொருளுலக வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து வகைப்பட்ட செய்திகளும் மிகமிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட தனித்தனித் துறைகளாகப் பிரித்து வகுத்து வழங்கப் பட்டிருக்கின்றன.
இவற்றுக்குள் அடங்காத உணர்வுகளோ, எண்ணங்களோ, கருத்துக்களோ, செயல்களோ, செய்திகளோ எதுவும் இல்லை, இல்லை, இல்லை, இல்லவே இல்லை, இருக்க முடியாது, இருக்க முடியாது, இருக்க முடியாது.
எனவேதான், இந்த இந்துவேதம் அல்லது இந்த இந்து வேத மதமான இந்து மதம் ஒரு சமுதாய இயலே ஆகும் என்று பதினெண் சித்தர்களால் மிகத் தெளிவாகப் பல இடங்களில் எழுதப் படுகிறது.
மேலும் பதினெண் சித்தர்களே, இந்த இந்து வேதமே இந்த உலகில் தோன்றிடக் கூடிய அனைத்து வேதங்களுக்கும் விதைப் பண்ணையாக, நாற்றுப் பண்ணையாக என்றென்றும் இருந்திடும் என்று மிகமிகத் தெளிவாகவும், விளக்கமாகவும் பல இடங்களில் எல்லா நூல்களிலும் குறிப்பிடுகிறார்கள்.
இது பற்றி, பத்தாவது, பதினோராவது பதினெண் சித்தர் பீடாதிபதிகள் விளக்கம் அளிக்கும் பொழுது இந்து வேதம், இம்மண்ணுலக வேதங்களுக்கு எல்லாம் தாயாகவும், மூலமாகவும், முதலாகவும், அடிப்படையாகவும், உள்ளீடாகவும், உயிராகவும் விளங்குகிறது,
மேலும் படிக்க...