• முகப்புப் பக்கம்>
  • இந்துவேதம்
  • இந்துவேதம்

    (ஒரு சுருக்க விளக்கம்)

    பத்தி 10
    பத்தி 10 இப்படி இந்து வேத மதமான இந்துமதம் எந்த அன்னிய மதத்தோடும் வேற்றுமையையோ, போட்டி பொறாமையையோ, சண்டை சச்சரவுகளையோ, கடும் போர்களையோ, நெடும் போராட்டங்களையோ வளர்த்துக் கொள்ளாத ஒன்றாக இருக்கின்ற பண்பினால் காலங்கள் தோறும் இந்து மதத்திற்கு நலிவும், மெலிவும் சிதைவும், சீரழிவும் தோன்றுவது இயற்கையாகி விட்டது. ஆனால் இந்த நலிவும், மெலிவும், சிதைவும், சீரழிவும் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து வேத மதமான இந்து மதத்தைப் பெருமளவில் பாதிக்கும் நிலை வந்தவுடனே இந்து வேதத்தின் 48 வகைப்பட்ட கடவுள்களும், 48 வகைச் சித்தர்களும், 48 வகை வழிபடுநிலையினர்களும், மற்றும் அருளுலகத்தவர்களும் நேரிலேயே வந்து செயல்பட ஆரம்பித்திடுவார்கள். மேலும் தங்களுடைய நேரடி வாரிசுகளையும், திருத்தோன்றல்களையும், பத்தியாளர்களையும், சத்தியாளர்களையும், சித்தியாளர்களையும், முத்தியாளர்களையும், சித்து விளையாடல் காரர்களையும் தேவைக்கேற்ப நாடு முழுவதும் தோன்றச் செய்து செயல்படச் செய்திடுவார்கள். இவையனைத்தும் கணிசமான அளவு வளர்ச்சி பெற்ற பிறகு பதினெண் சித்தர் மடம், பீடம்.

    மேலும் படிக்க...


    பத்தி 11
    பத்தி 11 இப்பேருண்மையின் அடிப்படையில்தான் பதினெண் சித்தர்கள் தங்களுடைய இந்து வேதமதமான இந்துமதம் பற்றிக் குறிப்பிடும் பொழுதெல்லாம், அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்களுடைய இந்துவேத மதமான இந்து மதம் என்ற சொற்றொடரையே எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். இதேபோல் பதினெண் சித்தர்கள் தங்களுடைய தாய்மொழியான தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதெல்லாம், அண்ட பேரண்ட அருளுலக ஆட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழி என்ற சொற்றொடரையே திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், அதாவது இந்துவேதமும், இந்து வேத மதமான இந்து மதமும், பதினெண் சித்தர்களுடைய தாய் மொழியான தமிழ் மொழியும் அண்டபேரண்டம் முழுவதும் நன்கு பரவியிருக்கக் கூடியவை என்ற பேருண்மையே மேலே குறிப்பிட்ட வாசகங்களால் தெளிவாக விளங்குகிறது.

    மேலும் படிக்க...


    பத்தி 12
    பத்தி 12 இந்த, இந்து வேதம் பெரும்பாலும் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய தெளிவான, எளிமையான, விளக்கமான அழகிய, குறுகிய, நெடிய சொற்றொடர்களைக் கலந்து கலந்து எழுதப் பட்டதாகும். இதனால் அதிக மொழியறிவு இல்லாதவர்கள் கூட இந்து வேதத்தின் வாசகங்களைப் படித்துப் பொருள் கொள்ள முடிகிறது. இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த வேதத்தின் எல்லா நூல்களுமே பெரும்பாலும் உரைநடையில்தான் எழுதப் பட்டிருக்கின்றன். அதாவது, வேதம் என்பது எல்லா வகைப்பட்ட மக்களாலும் எளிதில் படித்துப் பொருள் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கருத்தோட்டத்தில்தான் இந்து வேதம் எழுதப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பதினெண்சித்தர்கள் தங்களுடைய இந்து வேதத்தை மானுட இன மேம்பாட்டுக்காகவேதான் தோற்றுவித்தார்கள் என்ற பேருண்மை விளங்குகிறது.

    மேலும் படிக்க...


    பத்தி 13
    பத்தி 13 இந்து வேதம் என்று குறிக்கப்படுவது சிறப்பாகப் பூசை மொழிகள், பூசைவிதிகள், தத்துவங்கள், செயல் சித்தாந்தங்கள் என்ற நான்கு பெரும் பிரிவுகளை உடையதாகும், அதாவது பதினெண்சித்தர்களுடைய இந்து மதத்தில் இந்த நான்கு, நான்கின் மடங்குகளான எட்டு, பன்னிரண்டு, பதினாறு, முப்பத்திரண்டு, முப்பத்தாறு, நாற்பத்தெட்டு, அறுபத்தினான்கு தொண்ணூற்றாறு, நூற்றெட்டு, நூற்றி நாற்பத்தினான்கு, ஆயிரத்தெட்டு என்ற எண்ணிக்கைகளும்; ஐந்து, ஆறு, எழு, ஒன்பது, ஒன்பதின் மடங்குகளான பதினெட்டு, இருபத்தேழு, முப்பத்தாறு, ஐம்பத்தினான்கு, அறுபத்து மூன்று, எழுபத்திரண்டு, எண்பத்தொன்று, இருநூற்றி நாற்பத்து மூன்று, எழுநூற்றிருபத்தொன்பது, இரண்டாயிரத்து நூற்றியெண்பத்தேழு என்ற எண்ணிக்கைகளும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப் படுகின்றன.

    மேலும் படிக்க...


    பத்தி 14
    பத்தி 14 இந்த உலகத்தை நான்கு வகைப்பட்ட நிலங்களாக குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்), முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்), மருதம் (வயலும், வயல் சார்ந்த இடமும்), நெய்தல் (கடலும், கடல் சார்ந்த இடமும்) என்று நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள் பதினெண்சித்தர்கள். எனவேதான், இந்த உலகத்தை நானிலம் என்று பெயரிட்டார்கள். இதனடிப்படையிலேயே இந்து வேதத்தின் உறுப்புக்களை பூசை மொழி, பூசை விதி, தத்துவம், செயல் சித்தாந்தம் என்று நான்கு பகுப்புக்களாகப் பிரித்தார்கள். இதே போல், இந்து வேதத்தின் செயல் வடிவமான இந்து மதத்தின் செல்வங்களை மறைகள், முறைகள், நெறிகள், வேதங்கள் என்று நான்காகப் பகுத்தார்கள். இது மட்டுமின்றி இந்த நான்கிலுள்ள ஒவ்வொன்றையுமே நான்காகப் பகுத்து நான்மறைகள், நான்முறைகள், நானெறிகள், நான்வேதங்கள் என்று ஆக்கியிருக்கிறார்கள். இதேபோல், இந்து வேதத்தின் செல்வங்களாக அதாவது, இந்து வேதத்தைப் பயன்படுத்தி அருளை அநுபவப் பொருளாக விளைவித்துக் கொடுக்க கூடிய சாதனங்களாக நான்கு வகைப்பட்ட இலக்கியங்களை சுருதி, ஆரணம், ஆகமம், மீமாம்சை என்று படைத்திருக்கிறார்கள்.

    மேலும் படிக்க...


    பத்தி 15
    பத்தி 15 இப்படி இந்துவேதம் பதினாறு வகைப்பட்ட செல்வங்களைப் பெற்றிருப்பதைத் தான் கல்வி கற்கின்ற இளைஞர்களை வாழ்த்தும் பொழுது, ‘பதினாறும் கற்று பெருவாழ்வு வாழ்ந்திடு’ என்று வாழ்த்தும் மரபு தோன்றிற்று. இதைப் போலவே திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்வைத் துவக்குகின்ற மணமக்களை வாழ்த்தும் போது, இந்து மதம் பதினாறு வகைப்பட்ட செல்வங்களைப் பெற்றிருப்பதை நினைவில் கொண்டுதான் ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்ந்திடு’ என்று வாழ்த்தும் மரபு தோன்றிற்று. இப்படிக் கொள்கை வடிவில் இருக்கின்ற இந்து வேதத்தின் செல்வங்களும், செயல் வடிவில் இருக்கின்ற இந்துமதத்தின் செல்வங்களும்; அன்றாட வாழ்வியலின் நடை முறைகளில் அடிக்கடி பசுமையான, நினைவில் நிற்கின்ற அளவிற்கு இந்து வேதமும் இந்து வேத மதமான இந்து மதமும் நாடு முழுவதும் நன்கு விழிச்சியும், எழிச்சியும், மலர்ச்சியும், செழிச்சியும் உடைய வளர்ச்சி நிலையினைப் பெற்றிருந்திருக்கின்றன, பெற்றிருந்திருக்கின்றன, பெற்றிருந்திருக்கின்றன. ஆனால் இன்றுள்ள இந்து மதத்தின் பாமர மக்களுக்கும்; பத்தி, சத்தி, சித்தி, முத்தி நிலைகளைப் பெற்ற மத வாழ்வினர்களுக்கும்; மதத்தின் தலைவர்களான ஆச்சாரியார்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், தம்பிரான்கள், பண்டார சந்நதிகள், பண்டார சந்நிதிகள், சன்னிதானங்கள், ஆதீனங்கள், குருபீடங்கள் எனும் ஒன்பது பேர்களுக்கும்; ஏறத்தாழ பதினெண் சித்தர்களுடைய சித்தர் நெறியெனும் சீவ நெறியின் பெயரான இந்து எனும் சொல்லும், இந்துவேதம், இந்துவேத மதம், இந்துவேத மதமான இந்து மதம் எனும் சொற்களும் அல்லது சொற்றொடர்களும் தெரியாதவைகளாக இருக்கின்றன, தெரியாதவைகளாக இருக்கின்றன, தெரியாதவைகளாக இருக்கின்றன, புரியாதவைகளாக இருக்கின்றன, புரியாதவைகளாக இருக்கின்றன, புரியாதவைகளாக இருக்கின்றன.

    மேலும் படிக்க...


    பத்தி 16
    பத்தி 16 இப்படி, இன்றுள்ள பதினெண் சித்தர் மடம் துவக்கியுள்ள அறிவார்ந்த அருட் பணிதான் அருளுலகப் பொருளுலக இருள்களை அகற்றும். அப்பொழுதுதான் இந்துமதம் தனது ஆழ்ந்த தூக்க, ஏக்க, வீக்க, முடக்க, அடக்க, ஒடுக்க, நடுக்க. . நிலைகளிலிருந்து விடுபட்டிடும், விடுபட்டிடும், விடுபட்டிடும். ஏனென்றால், பதினெண் சித்தர் மடம்தான். இந்து மதத்தின் தலைமை மடமாக, தலைமைக் குரு பீடமாக, குவலய குருபீடமாக, இந்து வேத பீடமாக, இந்து வேத நாயகமாக, இந்து மதத் தந்தையாக, இந்து மதத் தலைமை ஆச்சாரியாராக, இந்து மத மூலப் பண்டாரமாக, இந்து மத மூலப் பண்டார சந்நதியாக, இந்துமத மூலப் பண்டார சந்நிதியாக, இந்து மத மூலத் தம்பிரானாக, இந்து மத மூல ஆதீனமாக, இந்து மத மூலக் குருமகா சன்னிதானமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது, அறிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு, இந்து மதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்ததர்களாலும் பதினெட்டாம் படிக் கருப்புகளாலும் வழங்கப் பட்டதாகும்.

    மேலும் படிக்க...