• முகப்புப் பக்கம்>
  • இந்துவேதம்
  • இந்துவேதம்

    (ஒரு சுருக்க விளக்கம்)

    பத்தி 31
    பத்தி 31 இந்து வேதம் தன்னுடைய நான்கு வகைப்பட்ட வேத நூல்களின் எண்ணிக்கைகளின் கூட்டுத் தொகையான முன்னூற்றுத் தொன்னூற்றாறு (396) என்ற எண்ணிக்கையோடு இந்து வேதத்திற்குரிய மூன்று வகைப்பட்ட சக்கரங்களின் எண்ணிக்கைகளான நூற்றெட்டு (108), இருநூற்றி நாற்பத்து மூன்று (243), ஆயிரத்தெட்டு என்ற எண்ணிக்கைகளையும்; இம்மூன்றின் கூட்டுத் தொகையான ஆயிரத்து முன்னூற்றி ஐம்பத்தொன்பது (1359) என்ற எண்ணிக்கையையும் சேர்த்து ஆக மொத்தம் ஐந்து எண்ணிக்கைளை, அதாவது எண்களை; இந்து வேதத்தின் புனிதமானவைகளாக, கடவுட் தன்மை உடையவைகளாக, தெய்வீக ஆற்றல் உடையவைகளாக, அருட்பாதுகாப்பு வழங்கக் கூடியவைகளாக அறிவிக்கிறது, அறிவிக்கிறது, அறிவிக்கிறது. எனவேதான், இநத ஐந்து எண்ணிக்கைகளே ‘நமசிவாய’, ‘பராசத்தி’, ‘சிவாயநம’ எனும் ஐந்தெழுத்துப் பூசைமொழி வாசகங்களுக்கு உரியனவாக அறிவிக்கிறது இந்து வேதம். இருந்த போதிலும், இந்த மூன்று பூசைமொழிகளில் ஒவ்வொரு பூசை மொழியை எழுதும் பொழுதும் எந்தெநத எழுத்துக்கு எந்தெந்த எண்ணிக்கையை உரியதாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பேருண்மை பதினெண் சித்தர்களுக்கும், பதினெண் சித்தர் பீடாதிபதிகளுக்கும் மட்டுமே தெரிந்திருக்கக் கூடியவைகளாக மறைத்துப் பாரம்பரியமாகப் பாதுகாக்கப் பட வேண்டும் என்று அறிவிக்கிறது இந்து வேதம்.

    மேலும் படிக்க...