பத்தி 24 இந்துவேதம் இந்த உலகத்தை நான்கு வகைப்பட்ட நிலங்களாகப் பகுத்து நானிலம் என்று பெயரிட்டாலும்; மானுட வாழ்வியலைப் பொருளுலக வாழ்வியலாகவும், அருளுலக வாழ்வியலாகவும் பகுக்கும் பொழுது இந்த உலகை ஐந்து வகைப்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு வந்து விட்டது.
எனவேதான்,
மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடம் முல்லை, வயலும் வயல் சார்ந்த இடம் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல், முல்லையும் குறிஞ்சியும் எதிர்பாராமல் இயற்கையின் சீற்றத்தால் வளம் குன்றி திரிந்தால் பாலை என்று ஐந்து வகைப்பட்ட நிலங்களாகப் பகுத்து இந்த ஐந்து வகைப்பட்ட நிலப்பகுப்புக்களே இந்து வேதத்தின் செயல்வடிவான இந்து மதத்திற்கு உரியவைகளாக அறிவிக்கப் பட்டு விட்டன.
அதாவது இந்து வேதத்தின்படி இந்த நிலம் நான்கு வகைப் பிரிவுகள் உடைய நானிலமாகும், ஆனால் இந்து மதப்படி இந்த உலகம் ஐந்து வகை நிலப்பரப்புக்களை உடைய ஐநிலமாகும்.
இந்த ஐந்நில மக்களின் வாழ்வே ஐந்திணை வாழ்வாகும்.
மேலும் படிக்க...
பத்தி 25 இந்த இந்துமதமே, இம்மண்ணுலகின் அருளுலகத்தைப் பொறுத்தவரை, அருளுலக விதைப் பண்ணையாகவும், அருளுலக நாற்றுப் பணையாகவும், உருவாக்கப்பட்டிட்டது.
எனவேதான், இந்த உலகில் முதன்முதல் தோன்றிய மிகப்பெரிய நிலப்பரப்பான இளமுறியாக் கண்டமெனும் குமரிக் கண்டத்தில் இந்து மதத்தின் அலுவலகங்களாகவும், செயலகங்களாகவும், உருவாக்கப் பட்டிட்ட அனைத்து வகையான நிறுவன நிர்வாகங்களும்; காலப்போக்கில் மூன்று கடல் கோள்களால் இளமுறியாக் கண்டம் சிதைந்து புதிய புதிய கண்டங்களும், சிறிய பெரிய தீவுகளும் தோன்றத் தோன்ற அங்கெல்லாம் உடனுக்குடன் உருவாக்கப்பட்டிட்டன.
அதாவது, அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்களும், பதினெட்டாம் படிக் கருப்புகளும், இவர்களைச் சேர்ந்தவர்களும், இம்மண்ணுலகோடு மிக நெருக்கமான தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், புதிது புதிதாக நிலப்பரப்புக்கள் தோன்றியவுடன் அங்குள்ள அருளுற்றுக்களை யெல்லாம் கண்டு பிடித்து முறையாக நாற்பத்தெட்டு (48) வகைக் கருவறைகளையும், 48 வகை வெட்டவெளிக் கருவறைகளையும், 48 வகை வழிபாட்டு நிலையக் கருவறைகளையும், 48 வகைக் கோயில்களின் மூலக்கருவறைகளையும் தோற்றுவித்து அண்ட பேரண்டமாளும் இந்து மதம் வேரூன்றித் தழைத்திடும்படிச் செய்திடுகிறார்கள்.
மேலும் படிக்க...
பத்தி 26 இப்படி இனச் சண்டை சச்சரவுப் போர் வெறிகள் மொழிகளுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் முளைத்துச் செழித்துக் கொழுத்து வளர்ந்து விட்ட காரணத்தினால்தான்;
தனி மனிதர்களுடைய உணர்வுகளையும், எண்ணங்களையும் அடுத்தவர்களுக்குப் பரிமாறி ஒருவருக்கொருவர் நட்பையும், தோழமையையும் வளர்க்கப் பயன்பட்டிடும் மொழி, தனி மனிதர்களுக்கிடையில் வேற்றுமைகளையும், பகைகளையும், தேவையில்லாத கசப்புணர்வுகளையும் வளர்க்கக் கூடிய ஒன்றாகி விட்டது.
இதைப் போலவே ஒர் இனமக்கள் அல்லது ஒரு நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக சமுதாயம் எனும் கட்டுக் கோப்பைப் பெற்று ஒற்றுமையுடனும், பற்றுடனும், பாசத்துடனும், சமத்துவத்துடனும், சமாதானத்துடனும் வாழ்வதற்குப் பயன்பட வேண்டிய மதம் குடும்பங்களுக்கிடையில் வேற்றுமைகளையும், பகைகளையும், தேவையில்லாத கசப்புணர்வுகளையும் வளர்க்கக் கூடிய ஒன்றாகி விட்டது.
எனவேதான், இம்மண்ணுலகில் மானுட இனங்களுக்கிடையில் நல்ல ஒற்றுமையும், பற்றும், பாசமும், சமாதானமும், சமத்துவமும், உருவாக்கப்பட வேண்டுமேயானால்; மொழிகளுக்கிடையேயும், மதங்களுக்கிடையேயும் முளைத்துக் கிளைத்துச் செழித்து வளர்ந்திருக்கின்ற போட்டி பொறாமை வெறுப்புணர்வுகள், மறுப்புணர்வுகள், எதிர்ப்புணர்வுகள், பகையுணர்வுகள், ஆதிக்கப் போர் வெறியுணர்வுகள் முதலியவை அனைத்தும் வேருடன் களையெடுக்கப்பட வேண்டும், களையெடுக்கப்பட வேண்டும், களையெடுக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டது.
மேலும் படிக்க...
பத்தி 27 என்றிப்படி, இந்து வேதம் என்று தலைப்பிட்டு முதல் யுகம் முடிந்து இரண்டாவது யுகத்தில் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகள் எழுத ஆரம்பித்து விட்டார்கள்.
அதாவது முதல் யுகம் முடிந்து மிகப்பெரிய கடல் கோள் ஏற்பட்டு, அதனால் இளமுறியாக் கண்டத்திலிருந்த தென் இமயமலையும், அதைச் சார்ந்த பெரும் பகுதியும் கடலுக்குள் மூழகி புதிய புதிய கண்டங்களும், சிறிய பெரிய தீவுகளும் புதிதாகத் தோன்றி; அங்கெல்லாம் பயிரினங்களும், உயிரினங்களும், மனிதர்களும் தோன்றி இரண்டாவது யுகத்தில் பல்வேறு இனங்களும், மொழிகளும், மதங்களும், இளமுறியாக் கண்டத்தோடு தொடர்பு கொண்டு வாழ்ந்திட்ட காலத்தில் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகளே இந்து வேதம், இந்து வேத மதமான இந்து மதம் என்று தலைப்பிட்டுப் பல நூல்களை எழுதினார்கள்.
அவை இந்து, வேதம், மதம், இந்து வேதம், இந்து மதம் என்ற ஐந்து சொற்களுக்கும் தனித் தனியாகப் பொருள் விளக்கம் கூறும் நூல்களாகவே சிறப்புற்று விளங்குகின்றன. காலப் போக்கில் தோன்றிய பதினெண் சித்தர் பீடாதிபதிகள் இந்த ஐந்து தலைப்புக்களிலும் இந்து வேதம், இந்து மதம் என்ற இரண்டு தலைப்புக்களில் மட்டும் சிறப்பாக விளக்குகின்ற நூல்களை எழுதினார்கள்.
மேலும் படிக்க...
பத்தி 28 பதினெண் சித்தர் பீடாதிபதிகள் உலக அளவில் இனச் சண்டை, மொழிச் சண்டை, மதச் சண்டை, நாட்டுச் சண்டை எனும் நான்கும் வலுப்பட்டும்; பெரும் போர்கள் நிகழ்ந்து உலக அமைதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் பொழுதுதான் தோன்றிச் செயல்படுவார்கள் என்பதுதான் மரபு.
இப்படித் தோன்றும் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் பெரும்பாலும் தங்களுடைய ஏட்டறிவாலும், பயிற்சி முயற்சித் தேர்ச்சி முதிர்ச்சிகளாலும் உலக மானுட இனத்தைக் காப்பாற்ற முயலுவார்கள், முயலுவார்கள், முயலுவார்கள்.
அம்முயற்சிகளுக்குச் சோதனைச் சாலைகளாக, பயிற்சிப் பள்ளிகளாக, உலைக்களங்களாக. . தங்களுடைய தாய் நாட்டையே பயன் படுத்திடுவார்கள்.
அதில் அவர்கள் எதிர்பார்க்கின்ற வெற்றி கிடைக்காத காரணங்களினால்தான் இந்து வேதத்தை நன்கு தெரிந்த இந்து வேதக் கடவுள்களில் யாராவது ஒருவரை அழைத்து, அவரைத் தங்களோடு உலகம் முழுவதும் சுற்றிக் காணச் செய்து; அதன் பிறகே உலகை அவர்களுடைய காலச் சூழ்நிலைகளில் உய்வித்துக் காப்பாற்றக் கூடிய இந்து வேதக் கருத்துக்களை மட்டும் இந்து வேதம் என்ற தலைப்பில் புதிதாக எழுதித் தரச் சொல்லி வாங்கி அதைப் பரப்புவார்கள்.
மேலும் படிக்க...
பத்தி 29 இந்து வேதம் என்பது
நூற்றெட்டு (108) பூசை மொழி நூல்களையும், நாற்பத்தெட்டுப் (48) பூசை விதி நூல்களையும், தொண்ணூற்றாறு (96) தத்துவ நூல்களையும், நூற்றிநாற்பத்து நான்கு (144) செயல் சித்தாந்த நூல்களையும் உடைய ஒன்றாகும்.
அதாவது இந்து நான்கு வகைப்பட்ட நூல்களின் கூட்டுத் தொகையான முன்னூற்றுத் தொண்ணூற்றாறு (396) என்பது இந்து வேதத்தைக் குறிக்கக் கூடிய ஒர் அருளூறு எண்ணிக்கையாகும்.
இந்த எண்ணிக்கையை மிகவும் புனிதமானதாக, கடவுட் தன்மை உடையதாக, தெய்வீக ஆற்றல் உடையதாக அருட் பாதுகாப்பு வழங்கக் கூடிய ஒன்றாக அறிவிக்கிறது இந்துவேதம், அறிவிக்கிறது இந்துவேதம், அறிவிக்கிறது இந்துவேதம்.
மேலும் படிக்க...
பத்தி 30 இந்து வேதத்தின் செயல் வடிவான இந்துமதம், தன்னால் உருவாகின்ற, அல்லது உருவாக்கப்படுகின்ற அருளாற்றல்களைச் சேமித்து அல்லது தேக்கி வைத்து உலகுக்கு வழங்குகின்ற சாதனம் அல்லது பாண்டம்தான் சக்கரம் எனப்படுவது.
இந்த சக்கரம் மூன்று பெரும் வகைகளை உடையதாகும். அதாவது, அலிநிலை ஆற்றல், பெண்நிலை ஆற்றல், ஆண்நிலை ஆற்றல் என்று மூன்று பெரும் வகையான ஆற்றல்களை உடைய சக்கரங்களையே அருளுலகின் முக்கோண அருட்பீடமாக உருவாக்கித் தருகிறது இந்து மதம்.
இதில்
அலிநிலைக்குரிய திருப்பதிச் சக்கரம் என்பது நூற்றெட்டு (108) வகைப்படும், பெண் நிலைக்குரிய சத்தி பீடச் சக்கரம் என்பது இருநூற்றி நாற்பத்து முன்று (243) வகைப்படும், ஆண் நிலைக்குரிய சீவாலயச் சக்கரம் என்பது ஆயிரத்தெட்டு (1008) வகைப்படும். இவை மூன்றின் கூட்டுத் தொகையான ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்தொன்பது (1359) என்ற எண்ணிக்கையும்; இவை ஒவ்வொன்றுக்கும் உரிய 108, 243, 1008 என்ற மூன்று எண்ணிக்கைகளும் சேர்த்து மொத்தமுள்ள நான்கு எண்ணிக்கைகளும் புனிதமானவைகளாக கடவுட்தன்மை உடையவைகளாக, தெய்வீக ஆற்றல் உடையவைகளாக, அருட்பாதுகாப்பு வழங்கக் கூடியவைகளாக இந்து மதம் அறிவிக்கிறது.
மேலும் படிக்க...