• முகப்புப் பக்கம்>
  • இந்துவேதம்
  • இந்துவேதம்

    (ஒரு சுருக்க விளக்கம்)

    பத்தி 17
    பத்தி 17 இந்த இந்துவேதம் இம்மண்ணுலகுக்கு அண்ட பேரண்டங்களிலிருந்து வந்த மூலப் பதினெண் சித்தர்களாலும், மூலப் பதினெட்டாம்படிக் கருப்புகளாலும் அனாதிக் காலம் எனப்படும் (4,85,920) நான்கு லட்சத்து எண்பத்தையாயிரத்து தொள்ளாயிரத்திருபது ஆண்டு காலம் விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களுக்கு வழங்கப்பட்டதாகும். அதாவது இன்றைக்கு 1991க்கு நாற்பத்தி மூன்று லட்சத்து எழுபத்து மூவாயிரத்து தொண்ணூற்றிரண்டு (43,73,092) ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்த இந்து வேதம் பதினெண் சித்தர்களாலும், பதினெட்டாம்படிக் கருப்புகளாலும் வழங்கப்பட்டதாகும். இப்படி இந்து வேதம் நான்கு லட்சத்து என்பத்தைந்தாயிரத்து தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் இம்மண்ணுலகில் கொள்கை வடிவில், தத்துவ வடிவில், சொல் வடிவில் மட்டுமே வாழ்ந்திட்டது. அதன் பிறகு தான் பஃறுளி யாற்றங்கரையில் நிறுவப்பட்ட தென் மதுரையில் இம்மண்ணுலகில் முதல் அரசான பாண்டிய அரசு ஆதிசிவனாரை முதல் அரசனாகக் கொண்டு உருவாக்கப்பட்டுச் செயல்வடிமான இந்துமதம் அறிவிக்கப்பட்டது. அதாவது இந்த இந்துமதம் இன்றைக்கு 1991-க்கு முப்பத்தெட்டு லட்சத்து எண்பத்தேழாயிரத்து நூற்றெழுபத்திரண்டு (38,87,172) ஆண்டுகளுக்கு முன்னால், கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டம் எனப்படும் குமரிக் கண்டத்தின் பஃறுளி ஆற்றங்கரையில் இருந்த தொன் மதுரையில் தோன்றிய இம்மண்ணுலகின் முதல் அரசான திங்கள் குலத்து (சந்திர குலத்து) பாண்டிய அரசின் முதல் அரசான ஆதிசிவனாரின் ஆட்சியில்தான் அரசாங்கப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    மேலும் படிக்க...


    பத்தி 18
    பத்தி 18 இந்த இந்து வேதம் ஆதிசிவனாரால்தான் சட்டப் பூர்வமாக இந்து மதமாக அறிவிக்கப் பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட ஆண்டை ஆரம்பமாகக் கொண்டுதான் இந்து மதத்தின் உகக் கணக்குகள் (யுகக் கணக்கு) கணக்கிடப்படும் மரபு தோன்றிற்று, இதன்படி கிரேதா யுகம் 17,28,080 ஆண்டுகள் திரேதா யுகம் 12,90,000 ஆண்டுகள் துவாபர யுகம் 8,64,000 ஆண்டுகள் கலியுகம்(கி.பி.1991 வரை) 5,092 ஆண்டுகள் ————————- 38,87,172 ஆண்டுகள் இப்படி இந்துமதத்தின் நான்கு யுக ஆண்டுக் கணக்கு இன்று 1991 உடன் 38,87,172 ஆண்டுகள் ஆகின்றன. இதுதான், இந்துமதம் தோன்றி வளமான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள வரலாற்றுக் காலம். ஆனால் இந்து மத ஆண்டு என்ற ஒரு காலக் கணக்கீட்டை, இந்து மதத்தின் தந்தையான பதினெண்சித்தர் பீடாதிபதிகள் குறிப்பிடுகிறார்கள். அக்கணக்கில் இந்த நான்கு உக ஒட்டுமொத்தக் காலக் கணக்கீட்டுடன், இந்து மதம் வடிவப் படாமல் இந்து வேதம் மட்டும் இம்மண்ணுலகுக்கு அறிவிக்கப் பட்டிருந்து அனாதிக் காலம் எனப்படுகின்ற 4,85,920 ஆண்டுகளும் சேர்த்தே கணக்கிடப்படுகிறது.

    மேலும் படிக்க...


    பத்தி 19
    பத்தி 19 இந்து வேதமும் காலக் கணக்கீடும். இந்த இந்து வேதம் கணக்கற்ற கோடி கோடி ஆண்டுகளாக அண்ட பேரண்டங்களில் வாழ்ந்து வருகின்ற ஒன்றாகும். எனவேதான் இந்த இந்து வேதம் 1,2,3, . . என்ற எண்களையும், எண்களின் வடிவங்களையும், எண்களின் வரிசை முறைகளையும்; கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எனும் நான்கு வகைப்பட்ட (சித்தர்கள் எதையும் நான்கு என்று பிரிக்கும் பழக்கப்படியே கணக்கியலிலும் பகுத்துள்ளார்கள் என்பது இங்கு எண்ணிப் பார்க்கத் தக்கது) கணக்கியல்களையும் மிகமிகத் தெளிவாகவும், வரையறுக்கப்பட்ட உண்மைகளாகவும் பெற்றிருக்கிறது. இதுவே இந்துவேதம் மிகப் பன்னெடுங் காலமாக பகுத்தறிவுப் போக்கில், அறிவு விழித்த நிலையில் வளர்க்கப் பட்டு வந்திருக்கிறது. அல்லது வளர்ந்திருந்திருக்கிறது என்பதற்குச் சான்றாகும். இதைத்தான், இந்துமதத்தை முதன் முதல் அரசாங்கப் பூர்வமாக இம்மண்ணுலகுக்கு அறிவித்த ஆதிசிவனார்; இந்து வேதம் மனித வாழ்வுக்கு அடிப்படையான (1) எண்ணையும், எண் சார்ந்த கணக்கியலையும்; (2) எழுத்தையும், எழுத்து சார்ந்த இலக்கிய இயலையும் இரு கண்ணென வழங்கியதால்தான் விலங்குகளோடு விலங்குகளாக வாழந்த மணீசர்கள் மென்மையும், நுண்மையும், ஒண்மையும், திண்மையும், பாண்மையும் ஊற்றெடுக்கும் மனதையுடைய மனிதர்களானார்கள்.

    மேலும் படிக்க...


    பத்தி 20
    பத்தி 20 இந்து வேத்தின் விண்ணியல் மண்ணியல் அளவு மூலப் பதினெண் சித்தர்களுடைய இந்து வேதம் அண்டங்கள், பேரண்டங்கள் அண்டபேரண்டங்கள் முழுவதும் பரவியிருக்கின்ற ஒன்று என்பதனால், இது இந்த மண்ணுலகியலின் இயல்புகளுக்கும், இயக்கங்களுக்கும் விண்ணியலோடு உள்ள தொடர்புகளையெல்லாம் முழுமையாக ஆராய்ந்து தேவையான உண்மைகளையெல்லாம் இந்து மதத்தின் வாழ்வியலாக வார்த்தெடுத்துத் தருகிறது. அதாவது இந்த இந்து வேதத்தில்தான் இம்மண்ணுலகம் எப்போழுது தோன்றிற்று? எப்படித் தோன்றிற்று?, இம்மண்ணுலகம் எப்பொழுது அழியும், எப்படி அழியும்?, இம்மண்ணுலகில் பயிரினங்களும் உயிரினங்களும், எப்பொழுது தோன்றின, எப்படி அழியும்?, இம்மண்ணுலகோடு தொடர்புடைய விண்மீன்கள் என்னென்ன, இராசிகள் என்னென்ன, கோள்கள் என்னென்ன?, இந்த மண்ணுலகுக்குத் தொடர்பான விண்ணுலகக் கடவுள்களின் வகைகள் என்னென்ன, மண்ணுலகக் கடவுள்களின் வகைகள் என்னென்ன? முதலிய மிகப் பெரிய பெரிய வினாக்களுக்கெல்லாம் மிகமிகத் தெளிவான நேரடியான வரையறுக்கப்பட்ட பதில்களைப் பெற்றிருக்கிறது. எனவேதான், இந்து வேதம் ஒரு நொடிப்பொழுது, ஒரு வினாடிப்பொழுது, ஒரு சாமப்பொழுது, ஒரு பகற் பொழுது, ஒர் இரவுப்பொழுது, ஒரு நாட்பொழுது முதலிய அனைத்தையும் கண் இமை தானாக இமைக்கின்ற நேரத்தை அடிப்படையாகக் கொண்டு மிகமிக நுட்பமாகவும் திட்பமாகவும் வரையறுக்கப்பட்ட அளவுகளைப் பெற்றனவாக உருவாக்கியிருக்கிறது.

    மேலும் படிக்க...


    பத்தி 21
    பத்தி 21 மேலே குறிப்பிட்டது போல் இந்துவேதம் ஒன்றில்தான் பகுத்தறிவுப் பூர்வமான ஆராய்ச்சிகளைப் பல்வேறு வகையினர்கள் கணக்கற்ற கோடியாண்டுகள் நிகழ்த்திக் கண்டறிந்த உண்மைகள் மிகுதியாக இருக்கின்றன. இதுமட்டுமல்ல இந்த இந்து வேதத்தில்தான் இந்து வேதத்தின் அருளுலகத்தவர்களான பதினெண் சித்தர்கள், 48 வகை சித்தர்கள், 48 கடவுள்கள், 48 வகைப்பட்ட வழிபடு நிலையினர்கள், 48 வகையான அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள், 48 வகையான மருளாளர்கள், மருளாளிகள், மருளாடு நாயகங்கள், 48 என்ற எண்ணிக்கைக்கு உட்பட்ட ஆச்சாரியர்கள், தோன்றிடக் கூடிய எண்வகை ஆச்சாரியார்கள், பதினான்கு வகைப்பட்ட குருவழி ஆச்சாரியார்கள், 14 வகைச் சித்தியாளர்கள் முதலியோர் அனைவரையுமே எவர் வேண்டுமானலும் முறையான பயிற்சி முயற்சிகளால் காண முடியும், காண முடியும், காண முடியும் என்றும்; கண்ணால் காண்பவர்களோடு எல்லா வகையான தொடர்புகளையும் உருவாக்கிக் கொள்ள முடியும் அல்லது வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் மிகத் தெளிவான செயல்முறைகளைப் பெற்றிருப்பதுதான் இந்துவேதம். இவற்றால்தான் இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய மூலப் பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புகளும், இந்து வேதத்தால்தான் அருளுலகப் பொருளுலக இருள்களுக்கும், இன்னல்களுக்கும் முடிவு காணப்பட்டு விடிவு உருவாக்கப்படும் என்று அழுத்தந் திருத்தமாக, ஆணித்தரமாகக் குறிக்கப் படுகிறது.

    மேலும் படிக்க...


    பத்தி 22
    பத்தி 22 இப்படி இந்து வேதம் தோன்றிய இடம் கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டம் என்பதும்; இந்த இந்து வேதம் தோன்றி இன்றைக்கு 1991ம் ஆண்டு என்ற கணக்குப்படி 43,73,092 ஆண்டுகளுக்கு முன்னால் இம்மண்ணுலகில் தோற்றுவிக்கப் பட்டது என்பதும்; இந்த இந்து வேதத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கியவர்கள் அண்டபேரண்டமாளும் பதினெண் சிததர்களும் பதினெட்டாம்படிக் கருப்புகளும் ஆவார்கள் என்பதும்; இந்த இந்து வேதம் நான்கு யுகங்களாக வாழ்ந்து வருகிறது என்பதும்; இந்த இந்து வேதத்தில் தான் எண்ணியல் அறிவு, கணக்கியல் அறிவு, எழுத்தியல் அறிவு, இலக்கிய இயல்அறிவு, விண்ணியல் அறிவு, விண்ணியல் இயக்க அறிவு, மண்ணியல் அறிவு, மண்ணியல் இயக்க அறிவு முதலிய கணக்கற்ற அறிவுகள் வளர்க்கப்பட்டுள்ளன என்பதும; பதினெண்சித்தர் பீடாதிபதிகளின் படைப்புகளில் மிகத் தெளிவாக அறிவிக்கப் படுகின்றன.

    மேலும் படிக்க...


    பத்தி 23
    பத்தி 23 மேலே குறிப்பிட்டது போல் பல்வேறு வகைப்பட்ட அறிவுகள் கலை இயல்களாகவும், அறிவியல்களாகவும் தோற்றுவிக்கப் பட்டுள்ளது இந்து வேதத்தில். ஆனால் இந்த இந்து வேதம் செயல் வடிவில் இந்து மதம் என்று வாழ ஆரம்பித்த பிறகு இதனுடைய அனைத்து வகைப்பட்ட அறிவியல்களும், கலையியல்களும் ஐந்து பெரும் வகைகளுக்கு உட்பட்டவைகளாக மிகத் தெளிவாகப் பகுக்கப்பட்டு விட்டன. அவை முறையே (1) ஞானம், (2) அகஞானம், (3) புறஞானம், (4) விஞ்ஞானம், (5) மெய்ஞ்ஞானம் என்று ஐந்து வகைப்படும்.

    மேலும் படிக்க...